Coolie : மோனிகா…. பூஜா ஹெக்டேவின் நடனத்தில் கூலி பட 2வது பாடல் வெளியானது!
Coolie Movie Pooja Hegdes Monica Song : நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் நிலையில், பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் பூஜா ஹெக்டேவின் நடனத்தில் மோனிகா என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் தமிழில் கமல்ஹாசன் முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை உச்ச நடிகர்களின் படங்களின் இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் (Rajinikanth) இவர் இணைந்திருந்த திரைப்படம்தான் கூலி (Coolie). மேலும் இவருடன் ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan), அமீர்கான் Aamir Khan) , நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திர ராவ், சௌபின் ஷாஹிர் மற்றும் சத்யராஜ் (Sathyaraj) எனப் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமும் பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ படத்தின் வெற்றியை அடுத்ததாக, இப்படமும் மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்தான் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது. இப்படத்திலிருந்து பூஜா ஹெக்டேவின் (Pooja Hegde) நடனத்தில் மோனிகா (Monica) என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : ரஜினிகாந்த் சார் கூலி பட ஷூட்டிங்கில் ரொம்ப கூல்.. நடிகை ஸ்ருதி ஹாசன் பேச்சு!
கூலி படக்குழு வெளியிட மோனிகா பாடல் பதிவு :
Monica, My dear Monica! 😍
The second single #Monica from #Coolie starring @hegdepooja💃🏻 is out now!▶️ https://t.co/UHACTjGPWg#Coolie worldwide from August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #SoubinShahir @iamSandy_Off #Sublahshini @AsalKolaar @iamnagarjuna… pic.twitter.com/AnM17WjgRL
— Sun Pictures (@sunpictures) July 11, 2025
மோனிகா பாடலில் நடனமாட பூஜா ஹெக்டே பெற்ற சம்பளம் :
நடிகை பூஜா ஹெக்டே இந்த கூலி படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவரின் நடனத்தில் பீஸ்ட் மற்றும் ரெட்ரோ போன்ற படங்களைத் தொடர்ந்து, கூலி படத்தின் மோனிகா என்ற பாடலும் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த கூலி படத்தில் பாடலுடன் பூஜா ஹெக்டே சிறு காட்சியிலும் நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்காக நடிகை பூஜா ஹெக்டே சுமார் ரூ. 3 கோடிகளைச் சம்பளமாகப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கூலி படத்தின் மொத்த ரிலீஸ் விநியோக வசூல் :
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கூலி படத்தில் பான் இந்திய மொழி நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க : தனுஷ் – ராஷ்மிகா மந்தனாவின் ‘குபேரா’ – ஓடிடி ரிலீஸ் எப்போது?
இந்நிலையில், இந்த விநியோகத்தில் இப்படமானது இந்தி மொழியைத் தவிர்த்து, மொத்தம் சுமார் ரூ. 288 கோடிகளுக்கு ரிலீஸ் உரிமை விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.