Pandiraaj : வாழ்க்கையில் இவர் கூட படமே பண்ணக்கூடாதுனு நினைத்தேன்.. இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
Pandiraaj About Vijay Sethupathi : இயக்குநர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் குடும்ப கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கொடுத்திருக்கிறார். மேலும் இவரின் இயக்கத்தில் ரிலீசிற்கு தயாராகியிருக்கும் படம் தலைவன் தலைவி. இப்படத்தின் நிகழ்ச்சியின்போது பேசிய அவர், விஜய் சேதுபதியுடன் படமே பண்ணக்கூடாது என நினைத்தேன் என வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் குடும்ப கதைக்களம் கொண்ட படங்களை இயக்கும் இயக்குநர் என்றால் நமது நினைவிற்கு வருபவர் பாண்டிராஜ் (Pandiraaj). இவர் தமிழில் பசங்க (Pasanga) திரைப்படம் முதல் கடைக்குட்டி சிங்கம் (Kadaikutty Singam) வரை பல குடும்ப கதைக்களம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ஆக்ஷ்ன் படம்தான் எதற்கும் துணிந்தவன். நடிகர் சூர்யாவின் (suriya) முன்னணி நடிப்பில் இப்படமானது வெளியாகியிருந்தது. கடந்த 20223ம் ஆண்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்து இவர் இயக்கியிருக்கும் படம் தலைவன் தலைவி (Thalaivan thalaivii). நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் நித்யா மேனனின் முன்னணி நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் நிகழ்ச்சியின்போது பேசிய இயக்குநர் பாண்டிராஜ். விஜய் சேதுபதியுடன் படங்களில் இணையவே கூடாது என நினைத்தேன் என ஓபனாக பேசியுள்ளார். இதுகுறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.




இதையும் படிங்க : நித்யாமேனன் மீது கோபப்பட்ட விஜய் சேதுபதி மனைவி.. ஏன் தெரியுமா?
விஜய் சேதுபதியை பற்றி ஓபனாக பேசிய பாண்டிராஜ் :
விஜய் சேதுபதி குறித்து பேசிய இயக்குநர் பாண்டிராஜ், “நான் 2009 ஆம் ஆண்டு பசங்க படம் பண்ணும்போது, 96 பட இயக்குநரை கேமராமேனாக அழைத்துவந்தவர் விஜய் சேதுபதிதான். மேலும் பசங்க படத்தில் விமல் நடித்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி என்னிடம் அணுகினார். நான்தான் அவர் அதில் செட் ஆக்கமாட்டார் என அனுப்பினேன். அதன் பின் அவர் என்னிடம் வந்து எனக்குப் பதிலாக மற்றொரு நடிகரை நடிக்கவைக்கமுடியுமா ? என கேட்டார், அப்படி அவர் அனுப்பியவர்தான் நடிகர் விமல்.
இதையும் படிங்க : மக்கள் குடும்ப படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் – இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்!
அப்போது நான், என்னடா இந்த மனுஷன் கூட இருந்தவர்களை உயர்த்துகிறார் என நினைத்தேன், அதன் பின் இவரும் உயர்வார் என நானும் நினைத்துக்கொண்டேன். அதைப்போலத்தான் இப்போது அவர் இருக்கிறார். அதுபோல எங்களுக்கு இடையே பெரிய பிரச்னையும் வந்தது. அதன் பிறகு வாழ்க்கையில் விஜய் சேதுபதியுடன் நான் படமே பண்ணக்கூடாது என நினைத்தேன் என்றார். அப்போது உடனிருந்த விஜய் சேதுபதியும் நகைச்சுவையாக, ”நானும் இந்த மனிதருடன் படம் பண்ணக்கூடாது என நினைத்தேன்” என்று தெரிவித்தார்.
இணையத்தில் வைரலாகும் பாண்டிராஜ் பேசிய வீடியோ :
“96 Director Premkumar was launched as cinematographer in Pasanga. Also casted Vimal in that film. Both was referred by VJS🫶. At one point we both had a big fight & decided not to collaborate👊. Finally we joined for #ThalaivanThalaivii✌️”
– Pandiraj pic.twitter.com/OBsaNC2HUt— AmuthaBharathi (@CinemaWithAB) July 15, 2025
விஜய் சேதுபதி மற்றும் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் தலைவன் தலைவி திரைப்படம், குடும்ப கதைக்களத்துடன் மாறுபட்ட படமாகத் தயாராகியுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.