Vijay Sethupathi: நித்யாமேனன் மீது கோபப்பட்ட விஜய் சேதுபதி மனைவி.. ஏன் தெரியுமா?
Vijay Sethupathi About His wife Reactions : நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தின் ப்ரீ -ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் விஜய் சேதுபதி, தலைவன் தலைவி படத்தில் நித்யா மேனனுடன் நடித்ததற்காக எனது மனைவி கோபப்பட்டார் எனக் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஏஸ் (Ace). கடந்த 2025ம் ஆண்டு, மே இறுதியில் வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படவில்லை. இதற்குக் காரணமாகப் படத்தின் ரிலீஸ் பெரிதும் யாருக்கும் தெரியாதுதான் எனவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் பெரிதாக நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக விஜய் சேதுபதியின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த திரைப்படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த தலைவன் தலைவி திரைப்படமானது, கணவன் மனைவியின் குடும்ப கதையை எடுத்துக் கூறும் வண்ணம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் தொடர்பாக நடந்த , நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, நித்யா மேனனுடன்( Nithya Menon) தலைவன் தலைவி படத்தில் நடித்ததற்காகத் தனது மனைவி கோபப்பட்டதாகக் கூறியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.




இதையும் படிங்க : கூலி பட ட்ரெய்லர் எப்போது? -லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!
விஜய் சேதுபதி மனைவியைப் பற்றிப் பேசிய விஷயம் :
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, ” இந்த திரைப்படத்தின் தொடக்கத்திலே எனக்கும் இயக்குநர் பாண்டிராஜுக்கும், லேசான மோதல்கள் இருந்தது உண்மைதான். ஆனால் அது எல்லாம் பின் சரியானது. சின்ன சின்ன சண்டைகளும் அழகுதான் . இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் கணவன் மனைவியாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள் என்றே கூறலாம்.
இதையும் படிங்க : மக்கள் குடும்ப படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் – இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்!
அந்த அளவிற்கு எதார்த்தம் மற்றும் அட்டகாசமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று கூறுவேன். இதைப் பார்த்து எனது மனைவியே கோபப்படும் அளவிற்கு, நாங்கள் இருவரும் உணர்வுப்பூர்வமாக இணைந்து நடித்திருக்கிறோம் என்றால் பாருங்களேன்” என விஜய் சேதுபதி அந்த மேடையில் ஓபனாக கூறியிருந்தார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
தலைவன் தலைவி திரைப்படத்தின் பாடல் ஹிட் தொடர்பான பதிவு :
This rugged kaadhal is stealing hearts non-stop! ❤️🔥#PottalaMuttaye crosses 10M+ views – vera level vibe from #ThalaivanThalaivii🎶🥳@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir@iYogiBabu @Music_Santhosh @Lyricist_Vivek@thinkmusicindia #Vijaysethupathi #NithyaMenen… pic.twitter.com/wdRSUrEgDx
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 11, 2025
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்த நடித்திருக்கும் படம் தலைவன் தலைவி. இயக்குநர் பாண்டிராஜ் இயக்க இப்படத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பிரொம்சோன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.