Theatrical Release Films : ‘பன் பட்டர் ஜாம் முதல் ட்ரென்டிங்’ வரை.. ஜூலை 18ல் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
List Of Movies Releasing In Theaters On July 18, 2025 : தமிழ் சினிமாவில் மாதத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த விதத்தில் இந்த வாரம் 2025, ஜூலை 18ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

பன் பட்டர் ஜாம் : பிக் பாஸ் பிரபலம் ராஜுவின் (Raju) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பன் பட்டர் ஜாம் (Bun Butter Jam). இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் (Raghav Mirdath) இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிக் பாஸ் ராஜுவுக்கு ஜோடியாக நடிகைகள் ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா த்ரிகா (Bhavya Trika) இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகர்கள் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி மற்றும் வி.ஜே. பப்பு என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது ஹாரர் மற்றும் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்ன இசையமைத்துள்ளார்.
இவரின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, ஜூலை 18ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் கிட்ட நெருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்துடன் மோதும் மற்ற படங்களை பற்றியும் பார்க்கலாம்.




இதையும் படிங்க : ரஜினியுடன் இணையும் ‘மகாராஜா’ பட இயக்குநர்? – ரசிகர்கள் ஹேப்பி!
ட்ரெண்டிங் & டைட்டானிக் திரைப்படம் :
தமிழ் பிரபல நடிகர் கலையரசனின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ட்ரெண்டிங். இந்த படத்தை இயக்குநர் சிவராஜ் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிகை பிரியாலயா நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் முதல் படமாகவும். இந்த படத்தில் நடிகர்கள் பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, பிரேம் குமார் மற்றும் ஷிவன்யா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ட்ரென்டிங் பட ட்ரெய்லர் பதிவு :
Thanks a lot sir .. love you ❤️❤️❤️ https://t.co/pm65itMNcz
— Kalaiyarasan (@KalaiActor) July 9, 2025
இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025 ஜூலை 18ம் தேதியில், வெளியாகிறது. முற்றிலும் காதல் மற்றும் ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. மேலும் இவரின் நடிப்பிலும் மற்றொரு திரைப்படமான டைட்டானிக் என்ற திரைப்படமும் 2025, ஜூலை 18ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் இணையும் வெங்கட் பிரபு!
கெவி திரைப்படம் :
இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கெவி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் ஆதவன், ஷீலா ராஜ்குமார், பிக் பாஸ் பிரபலம் ஜாக்குலின் மற்றும் சார்லஸ் வினோத் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முற்றியும் ஹாரர் மற்றும் க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 18ம் தேதியில் மற்ற படங்களுடன் திரையரங்குகளில் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ட்ரல் திரைப்படம் :
தமிழ் அறிமுக இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சென்ட்ரல். இந்த படத்தில் நடிகர்கள் ஜே. விக்னேஷ், பேரரசு மற்றும் ஆறு பாலா போன்ற முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். ரவுடி மற்றும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட இந்த படமானது வரும் 2025, ஜூலை 18ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.