Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சித்தார்த்தின் ‘3BHK’: வாழ்த்திய ‘கோலங்கள்’ சீரியல் குழு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Kolamgal Serial Team Greets 3BHK Movie : இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 3BHK. இந்த படமானது கடந்த 2025, ஜூலை 4ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பார்த்த பிரபல சீரியல் கோலங்கள் குழு, இப்படத்தை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை 3BHK படக்குழு வெளியிட்டுள்ளது.

சித்தார்த்தின் ‘3BHK’: வாழ்த்திய ‘கோலங்கள்’ சீரியல் குழு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சித்தார்த்தின் 3BHK திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jul 2025 21:08 PM

நடிகர்கள் சித்தார்த் (Siddharth) மற்றும் சரத்குமாரின் (Sarathkumar) முன்னணி நடிப்பில் வெளியான திரைப்படம் 3BHK. இந்த படமானது நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படமாகக் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் சரத்குமாருடன், தேவயானி (Devayani), மீத்தா ரகுநாத் (Meetha Raghunath) போன்ற முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தைத் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Sri Ganesh) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இப்படமானது கடந்த 2025, ஜூலை 04ம் தேதியில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படமானது வீடு வாங்குவதற்குக் கஷ்டப்படும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதைக்களத்துடன் உருவாகியிருந்தது. இப்படமானது வெளியாகி 2 வாரங்களான நிலையில், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த 3BHK படத்தைப் பிரபல கோலங்கள் சீரியல் குழு (Kolamgal serial team) பார்த்துள்ளனர். இந்த பார்த்த பார்த்த சீரியல் குழு படத்தையும் படக்குழுவினர்களையும் வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை 3BHK படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்கும் தபு?

3BHK படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு :

3BHK திரைப்படத்தின் வசூல் :

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படமாக வெளியாகியிருப்பது இந்த 3BHK திரைப்படம். இந்த படத்தில் நடிகர் சரத்குமார் , நடிகர் சித்தார்த்தின் தந்தையாக நடித்திருந்தார். மேலும் சரத்குமாருக்கு ஜோடியாகப் பல ஆண்டுகளுக்குப் பின் நடிகை தேவயானி இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தைச் சாந்தி டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இடத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படிங்க : பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து – ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு!

மேலும் இப்படத்தில் சித்தர் மற்றும் சைத்ரா ஜே அசார் ஜோடியும் மக்கள் மத்தியில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமானது வெளியாகி சுமார் 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இந்த படமானது இதுவரை சுமார் ரூ. 8.06 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றிய தகவல் koimoi இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் வரவேற்பு :

இந்நிலையில் சுமார் இரண்டு வாரங்களுக்குப் பின்னும் திரையரங்குகளில் இந்தப் படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிடில் கிளாஸ் குடும்பம் தொடர்பாக இப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், அனைத்து தரப்பினரையும்  கவர்ந்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இப்படத்தின் திரையரங்கு ரிலீஸை அடுத்ததாக ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.