Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்கும் தபு?

Vijay Sethupathi Telugu Movie Update : நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவை அடுத்ததாகத் தெலுங்கிலும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைப் பூரி ஜெகன்நாத் இயக்க பல நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றன. இந்த படத்தில் நடிகை தபுவும் முக்கிய நடிகையாக நடிக்கும் நிலையில் , அவர் இது நெகடிவ் ரோலில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்கும் தபு?
விஜய் சேதுபதி மற்றும் தபுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jul 2025 19:00 PM

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) . இவரின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் (Samyuktha Menon) நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தனுஷின் வாத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் பூரிஜெகன்நாத் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவாகிவரும் இப்படத்திற்கு டைட்டில் இன்னும் வைக்கப்படவில்லை. இந்த படமானது கடந்த 2025 மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பூரி ஜெகன்நாத் உருவாக்கி வருகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், சம்யுக்தா மேனன், தபு (Tabu), நிவேதா தாமஸ் மற்றும் துனியா விஜய் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகை தபு வில்லி ரோலில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ – 2வது பாடல் வெளியானது!

நடிகை தபு நடித்த நெகடிவ் ரோல் திரைப்படங்கள் :

நடிகை தபு பிரபல பான் இந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழில் அஜித் குமாருக்கு ஜோடியாகவும் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை தபு , விஜய் சேதுபதிக்கு எதிர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் ‘SK24’ பட ஷூட்டிங் தாமதம்.. காரணம் என்ன தெரியுமா?

இவர் இதற்கு முன்னே மக்பூல் மற்றும் அந்தாதுன் போன்ற திரைப்படங்களில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார். இந்த படங்களை அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதியின் , தெலுங்கு அறிமுக படத்திலும் எதிர் ரோலில் நடித்தது வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் தெலுங்கு புதிய பட ஷூட்டிங் ஆரம்பம் :

இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் இந்த புதிய படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஜூலை ஆரம்பத்தில் தொடங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.