Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இயக்குநர் பிரேம் குமாருடன் இணையும் சீயான் விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Vikram – Prem Kumar Combo Set for Next Big Film : வீர தீர சூரன் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கவிருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் பிரேம் குமாருடன் இணையும் சீயான் விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விக்ரம் - பிரேம் குமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Jul 2025 18:42 PM

தமிழ் சினிமாவில் பரபரப்பான படங்களுக்கு மத்தியில் 96, மெய்யழகன் (Meiyazhagan) என மென் உணர்வுகளைப் பேசும் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பிரேம் குமார். அந்த வகையில் கார்த்தி (Karthi), அரவிந்த்சாமி நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியான மெய்யழகன் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. குறிப்பாக ஓடிடியில் வெளியான பிறகு இந்தப் படத்துக்கு ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குநர் பிரேம் குமாரின் அடுத்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகியிருக்கிறது. சீயான் விக்ரம் (Vikram) நடிக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ் சினிமாவின் புதிய காம்போ

இயக்குநர் பிரேம் குமார் அடுத்ததாக 96 படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் திரில்லர் படம் என இரண்டு படங்களுக்கு திரைக்கதை அமைத்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் சின்மயி, இயக்குநர் பிரேம் குமாரிடம் உங்கள் அடுத்த படம் என கேட்க, ஒரு திரில்லர் படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக தெரிவித்திருந்தார். அதன் படி இந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறார். தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் மற்றும் இயக்குநர் காம்போ உருவாக்கும் படமாக இந்தப் படம் இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்துக்கு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

விக்ரம் – இயக்குநர் பிரேம் குமாரின் புதிய படம் பற்றி வேல்ஸ் நிறுவனம் அறிவிப்பு

 

விஜய் சேதுபதியின் ’96’ 2

மெய்யழகன் படத்தின் வெளியீட்டின் போது தனது அடுத்த படமாக 96 2 படம் இருக்கும் எனவும் முதல் பாகத்தில் இருந்து மாறுபட்ட கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகவிருப்பதாகவும் இயக்குநர் பிரேம் தெரிவித்திருந்தார். தற்போது விக்ரம் படத்துக்கு பிறகு 96 2 படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படம்  நல்ல வரவேற்பை பெற்றது. எஸ்.யூ.அருண்குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் விக்ரமிற்கு நல்ல வரவேற்பை கொடுத்த படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.