Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Marshal : கார்த்தியின் ‘மார்ஷல்’ – பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Marshal Movie shooting Pooja Video : நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மார்ஷல். இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் இப்படமானது, கடற்கரை சார்ந்த கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், அது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Marshal : கார்த்தியின் ‘மார்ஷல்’ – பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!
கார்த்தி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Jul 2025 18:27 PM

தமிழ் சினிமாவில் துணை நடிகர் மற்றும் இயக்குநராக வலம்வருபவர் தமிழ் (Tamizh). இவர் கடந்த 2022ம் ஆனது வெளியான டாணாக்கரான் (Taanakkaran) என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார். இந்த படத்தையடுத்து தற்போது, நடிகர் கார்த்தி (Karthi)  நடிப்பில், மார்ஷல் (Marshal) என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படமானது கார்த்தியின் 29வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை கடந்த 2025, ஜூலை 10ம் தேதி நடைபெற்றிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran), சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் நடிகர்கள் சத்யராஜ் (Sathyaraj) ,பிரபு , லால் மற்றும்  கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) இணைந்து நடிக்கின்றனர்.

இந்த மார்ஷல் படமானது கடல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படக்குழு ஷூட்டிங் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் (Sai Abhyankkar) இசையில் வெளியான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற வருகிறது.

இதையும் படிங்க : ‘விஷால்35’ படத்தின் ஷூட்டிங் பூஜை.. விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் துஷாரா விஜயன்!

மார்ஷல் படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் பூஜை வீடியோ :

கார்த்தியின் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு நடிகை நானி கேமியோ ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மார்ஷல் படமானது முற்றிலும் கடல் கொள்ளை சார்ந்த கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாக்கவுள்ளதாம். மேலும் இப்படமானது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாகிவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

இதையும் படிங்க : ரஜினியுடன் இணையும் ‘மகாராஜா’ பட இயக்குநர்? – ரசிகர்கள் ஹேப்பி!

மார்ஷல் பட ஷூட்டிங் எப்போது & எங்கே :

கார்த்தியின் 29வது படமாக உருவாகும் மார்ஷல் படத்தின் ஷூட்டிங் இராமேஸ்வரத்தில் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்காக செட் ஏற்கனவே அங்கு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூலை மாதத்தின் இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.

ரிலீஸிற்கு காத்திருக்கும் கார்த்தியின் படம்

நடிகர் கார்த்தியின் நடிப்பில் ரிலீஸிற்காக வா வாத்தியார் மற்றும் சர்தார் 2 என இரு படங்கள் உள்ளது. இதில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வா வாத்தியார் படமானது இறுதிக்கட்ட வேலையில் இருக்கிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்திலும் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், வரும் 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.