Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கவினுடன் ஜோடியாகும் பிரியங்கா மோகன்.. புதிய படத்தின் அப்டேட் இதோ!

Kavin And Priyanka Mohan New Movie : வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் கவின். இவரின் முன்னணி நடிப்பில் பல படங்கள் உருவாகிவரும் நிலையில், நடிகை பிரியங்கா மோகனுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தைப் பற்றிய மேலும் தகவல்கள் பற்றிப் பார்க்கலாம்.

கவினுடன் ஜோடியாகும் பிரியங்கா மோகன்.. புதிய படத்தின் அப்டேட் இதோ!
கவின் மற்றும் பிரியங்கா மோகன் படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Jul 2025 12:54 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கவின் (Kavin). இவர் ஆரம்பத்தில் சின்னதிரை சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் பணியாற்றிவந்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், தொடர்ந்து சினிமாவிலும் களமிறங்கினார். தற்போது இவர் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராகி இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் பிளடி பெக்கர் (Bloody begger). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்க, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்திருந்தார். இந்த படமானது இவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பைக் கொடுக்கவில்லை. இந்த படத்தை அடுத்ததாக, கிஸ் (Kiss) மற்றும் மாஸ்க் (Mask) போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், மேலும் புதிய படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.

அந்த வகையில் கவின் தனது 9வது திரைப்படத்தில், நடிகை பிரியங்கா மோகனுக்கு (Priyanka Moha) ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த புதிய படத்தை ‘கனா காணும் காலங்கள்’ தொடரை இயக்கிய இயக்குநர் கென் ராய்சன் ( Ken Royson)  இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடைபெற நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு.. ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு!

திங் ஸ்டூடியோஸ் வெளியிட்ட கவின்09 பட ஷூட்டிங் பூஜை புகைப்படங்கள் :

கவின் மற்றும் பிரியங்கா மோகன் கூட்டணி :

நடிகர் கவினின் இந்த 9வது திரைப்படத்தை இயக்குநர் கென் ராய்சன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, தற்போது சினிமாவிலும் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். கவினின் இந்த புதிய படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான திங் ஸ்டூடியோஸ் சிறுவனும் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.

இதையும் படிங்க : இயக்குநர் பிரேம் குமாருடன் இணையும் சீயான் விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் கவின் , நடிகை பிரியங்கா மோகனுடன் ஜோடியாக இணையவுள்ளார். இதுதான் இவர்கள் இருவரும் இணையும் முதல் படமாகும். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியிருக்கும் நிலையில், அடுத்தடுத்த தகவல்களும் விரைவில் வெளியாகுமெனக் கூறப்படுகிறது.

கவினின் புதிய படங்கள் :

கிஸ் மற்றும் மாஸ்க் படத்தை அடுத்ததாக நடிகர் கவின், தண்டட்டி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்திலும் கவின்09 படத்தில் இணைந்துள்ளார். ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 2 படங்களில் நடிகர் கவின் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.