Tamil Nadu Election: தமிழகத்தில் உறுதியானது நான்கு முனை போட்டி.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!!
Tamil Nadu Assembly Election: தவெக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ராகுல் காந்தி விஜய்யை தொடர்பு கொண்டு பேசியதாகவும், மேலிட தலைவர்கள் விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வந்தநிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் மீண்டும் திமுகவுடன் கூட்டணியை இறுதி செய்தது.
Tamil Nadu Polls 2026: தமிழகத்தில் 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது. தமிழக அரசியல் களம் கடந்த ஓராண்டுக்கு முன்னரே பரபரப்பாகிவிட்டது. கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பலம் வாய்ந்த அணியாக திமுக கூட்டணி திகழ்கிறது. அந்த அணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது அந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. அதேபோல் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஜி.கே.வாசனின் தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிக்க: நமது தலைமையில் தான் ஆட்சி.. அவதூறுகளை நம்ப வேண்டாம் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்..
தவெக யாருடன் கூட்டணி?
இந்த சூழ்நிலையில் விஜய்யின் தவெக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ராகுல் காந்தி விஜய்யை தொடர்பு கொண்டு பேசியதாகவும், மேலிட தலைவர்கள் விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வந்தநிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் மீண்டும் திமுகவுடன் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது. அதன்தொடர்ச்சியகா, தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இடம்பெற உள்ளதாகவும் டெல்லியில் இதற்கான சந்திப்புகள் நிகழ்ந்ததாகவும் விஜய்க்கு துணை முதல்வர பதவி என்றெல்லாம் கூட தகவல்கள் வெளியாகி தீயாக பரவிவந்தன.
முடிவுக்கு வந்த கூட்டணி பரபரப்பு:
அதேசமயம், தவெக தரப்பில் இந்த தகவல்கள் எதையும் உறுதிசெய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை உறுதிப்பட தெரிவித்துவிட்டார். அதோடு, தவெக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார். இதன் மூலம் தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற பரபரப்பு முடிவுக்கு வந்தது என்றே கூறலாம். விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி, வழக்கம்போல் தனித்தே களம் காண்கிறது. எனவே தமிழகத்தில் 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.
திமுகவின் நம்பிக்கை:
திமுக கூட்டணியை பொறுத்தவரை 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தொடர் வெற்றிகளை பெற்று வருவது அதன் பலமாக உள்ளது. தற்போது மேலும் கட்சிகள் கூட்டணியில் இணைந்து இருப்பதாலும், 5 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் உற்சாகத்துடன் களத்தில் இறங்கியுள்ளது.
வெற்றி முனைப்பில் அதிமுக:
அதிமுகவை பொறுத்தவரை கடந்த முறை இழந்த வெற்றி வாய்ப்பை இந்த முறை மீட்டெடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தலை எதிர்கொள்கிறது. அதிமுகவுடன் முதலில் பாஜக இணைந்தது. அதன்பின் பாமக (அன்புமணி ராமதாஸ்) சேர்ந்தது. இது நடக்கவே நடக்காது, வாய்ப்பே இல்லை என்று எல்லோரும் சொல்லிக் கொண்டு நிலையில் திமுகவை வீழ்த்த ஒன்றிணைகிறோம் என்று கூறி அமமுகவும் அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டது. அதிமுகவில் தொகுதி பங்கீடு குறித்து வெளிப்படையாக இன்னும் அறிவிக்காவிட்டாலும், திரைக்கு பின் எல்லாம் முடிந்து விட்டது என்றே தெரிகிறது. விரைவில் யார்? யார்? எந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது தெரியவரும்.
உற்சாகத்தில் நாதக:
மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியோ வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 8 சதவீத வாக்கு சதவீதம் மூலம் கட்சி அங்கீகாரம் பெற்ற சீமான், அந்த உற்சாகத்தோடு களம் காண்கிறார். மற்ற கட்சிகள் எல்லாம் பெண்களுக்கு சம உரிமை என்று சொல்வதை சீமான் செயல்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிக்க : வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் – முதல்வர் ஸ்டாலின்..
தனித்து களமிறங்கும் தவெக:
சினிமாவில் இருந்து விலகி, புதிதாக கட்சி தொடங்குவதாக விஜய் அறிவித்தார். தனது கட்சியின் முதல் மாநாட்டிலேயே, “எங்களுடன் கூட்டணி சேருபவர்களுக்கு, ஆட்சியில் பங்கு தருவோம், கூட்டணி ஆட்சி அமைப்போம்” என்றார். ஆனால் அவரின் இந்த வலைவீச்சுக்கு யாரும் விழவில்லை. எனவே தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்ற முழக்கத்தோடு களம் இறங்கியுள்ளார் விஜய். இந்த நான்குமுனை போட்டியால், வெற்றி என்பது யாருக்கும் எளிதல்ல என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.