AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் – முதல்வர் ஸ்டாலின்..

2021 ஆம் ஆண்டு திமுகஆட்சியை கைப்பற்றியது போல மீண்டும் இந்த முறைவும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திமுகவைப் பொருத்தவரையில் 21 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதாவது விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் – முதல்வர் ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Mar 2026 17:57 PM IST

சென்னை, மார்ச் 18, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய சூழலில், தமிழக அரசியல் களத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “வளர்ச்சியை தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

2021 ஆம் ஆண்டு திமுகஆட்சியை கைப்பற்றியது போல மீண்டும் இந்த முறைவும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திமுகவைப் பொருத்தவரையில் 21 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதாவது விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

கூட்டணி இறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒவ்வொரு கட்சிகளுடனும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அதேபோல் திமுக தரப்பில் மாநில மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாநாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் படிக்க: தூத்துக்குடி பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள்… தமிழக தொல்லியல் வரலாற்றில் புதிய மைல்கல்

மாநில மாநாடுகளில் திமுக செய்திருக்கும் சாதனைகள் மற்றும் எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

வளர்ச்சியை தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்:

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்: “இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? எங்கள் மேடைகளில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்து கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: செயற்பாட்டு வரைவு 2026.. நாளை வெளியிடப்படும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை..

மறுபுறம் சொல்வதற்கு சாதனைகளும் செயல்படுத்துவதற்கு கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியை தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us