விஜய் சேதுபதியால் மாறிய வாழ்க்கை… ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன தகவல்!
Aishwarya Rajesh Kaaka Muttai Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், காக்கா முட்டை படத்தில் நடிப்பதற்குக் காரணம் யார் எனக் கூறியுள்ளார். அந்த நடிகர் யாரை என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழ்ப் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் 80ஸ் பிரபல தெலுங்கு நடிகரான ராஜேஷ் (Rajesh) என்பவரின் மகள் ஆவார். இவரின் தனது தந்தையைப் போல சினிமாவில் நடிகராக தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவே தனது நடிப்பை தொடங்கியுள்ளார். பின் கடந்த 2010ம் ஆண்டு வெளியான நீதான் அவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகியாக அறிமுகமான திரைப்படமாக அமைந்து ரம்மி (Rummy).
கடந்த 2014ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு (Vijay Sethupathi) ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் பிறகு இவருக்கு தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகியிருந்தது. இந்நிலையில், இந்த தமிழ் திரைப்படங்களை அடுத்ததாகத் தெலுங்கிலும் படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினர்.
இவருக்கு பல விருதுகளை வாங்கிக்கொடுத்த தமிழ்ப் படமாக அமைந்தது காக்கா முட்டை (Kaaka Muttai). கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் எம். மணிகண்டன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்த படமானது இருவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் கொடுத்தது.
இதையும் படிங்க : நிறையக் கஷ்டங்கள்.. விஜய் சேதுபதிக்கு நடந்த சம்பவம்!
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில், இந்த படத்தில் நடிப்பதற்குக் காரணமாக இருந்த நடிகரை பற்றி கூறியுள்ளார். அந்த நடிகர் வேறு யாருமில்லை, விஜய் சேதுபதிதான். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
விஜய் சேதுபதி பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன விஷயம் :
அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். “எனது வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் என்றாலே அது காக்கா முட்டை திரைப்படம். அந்த திரைப்படத்தில் நான் நடிப்பதற்குக் காரணமே விஜய் சேதுபதிதான். நான் மிகவும் குழப்பமாக இருந்தேன், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதற்கு நிறைய யோசித்தேன். அப்போதுதான் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன்.
இதையும் படிங்க : அந்நியன் படத்தின் அம்பி ரோல்.. நடிகர் விக்ரம் சொன்ன உண்மை!
அப்போதுதான் விஜய் சேதுபதி என்னிடம், நீங்கள் நிச்சயமாக அந்த திரைப்படத்தில் நடிக்கவேண்டும். இயக்குநர் மணிகண்டனை நம்பி அந்த திரைப்படத்தில் நடிங்க , அதைப் பற்றி பெரிதாக எதுவும் யோசிக்காதீர்கள் என்று என்னிடம் கூறினார். மேலும் அவர் சொன்ன அந்த காரணத்திற்காக மட்டும்தான் அந்த படத்திலே நடித்தேன்” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மேடையில் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.