Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vishal : சாய் தன்ஷிகாவுடன் திருமணம் தள்ளிப்போகிறதா? விஷால் கொடுத்த விளக்கம்!

Vishal And Sai Dhanshika Wedding : நடிகர் விஷாலும், பேராண்மை படப் புகழ் நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதல் மற்றும் திருமணத்தைப் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகக் கூறியிருந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் தள்ளிப்போவதாகத் தகவல்கள் எழுந்துவரும் நிலையில், நடிகர் விஷால் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Vishal : சாய் தன்ஷிகாவுடன் திருமணம் தள்ளிப்போகிறதா? விஷால் கொடுத்த விளக்கம்!
விஷால் மற்றும் சாய் தன்ஷிகாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 18 Jul 2025 14:16 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷால் (Vishal). இவர்  நடிகராக மட்டுமில்லாமல், தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாகத் தமிழில் மத கஜ ராஜா (Madha Gaja Raja)படமானது வெளியாகியிருந்தது. சுமார் 12 வருடங்களுக்கு முன் தயாரான இப்படம் கடந்த 2025, ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்தது. இப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் விஷாலை மற்றும் நடிகை சாய் தன்ஷிகா(Sai Dhanshika), இருவரும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகக் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரின் திருமணம் ஆகஸ்ட் 29ம் தேதியில் நடப்பதாகக் கூறியிருந்த நிலையில், அது தள்ளிப்போவதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நடிகர் விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : மீண்டும் ‘ப்ரீடம்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு.. சோகத்தில் ரசிகர்கள்!

திருமணம் குறித்து விஷால் விளக்கம் :

சமீபத்தில் ரெட் பிளவர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால், பல தகவல்களைக் கூறியிருந்தார். அதில் அவர் தனது திருமணத்தைப் பற்றிய ரசிகர்களின் சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர், “நடிகர் சங்க கட்டிடம் விரைவில் திறக்கப்படும், அங்கு வைத்துதான் எனது திருமணம் நடைபெறும், நிச்சயமாகத் தாமதமாகாது. வரும் 2025 ஆகஸ்ட் 29ம் தேதியில் நல்ல செய்தி சொல்வேன்” என நடிகர் விஷால் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க : விஜய் தேவரகொண்டாவுக்கு டெங்கு காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஷால் வெளியிட்ட 35வது பட அறிவிப்பு பதிவு :

நடிகர் விஷாலின் நடிப்பிலும் இயக்குநர் ரவி அரசுவின் இயக்கத்திலும், விஷால்35 படமானது உருவாகிவருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. இது இந்த நிறுவனத்தின் 99வது படமாகும். இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் ஆரம்பமான நிலையில், அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.