Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதல் 3 நாட்களுக்கு யூடியூப் விமர்சனங்கள் வேண்டாம்: விஷால் வேண்டுகோள்!

No Public Reviews, Says Vishal : திரையரங்குகளில் முதல் 3 நாட்களில் படம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க அனுமதிக்கக் கூடாது என நடிகர் விஷால் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், முதல் 3 நாள், குறைந்தபட்சம் 12 காட்சிகளுக்கு திரையரங்கில் நுழைந்து மக்களிடம் விமர்சனங்களைப் பதிவு செய்யக் கூடாது என கேட்டுக்கொண்டார்.

முதல் 3 நாட்களுக்கு யூடியூப் விமர்சனங்கள் வேண்டாம்: விஷால் வேண்டுகோள்!
நடிகர் விஷால்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Jul 2025 17:09 PM

சுந்தர். சி (Sundar.C) இயக்கத்தில் விஷால், (Vishal) சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான மதகஜராஜா திரைப்படம் இந்த ஆண்டின் மிக முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இது கமர்ஷியல் படங்களின் மீதான மக்களின் ஆர்வத்தை காட்டுகிறது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். ரவி அரசு இயக்கும் இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் ரெட் ஃபிளவர் என்ற படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 3 நாட்களுக்கு யூடியூப் விமர்சனம் வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.

3 நாட்களுக்கு யூடியூப் விமர்சனங்கள் வேண்டாம்

ரெட் ஃபிளவர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டு பேசியதாவது, திரைப்படங்களை விமர்சிக்கும் கலாச்சாரத்தால் முதல் 3 நாட்கள் வசூல் பாதிப்பதாக தெரிவித்தார். மேலும் ஒரு திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகும் போது, முதல் 3 நாள், குறைந்தபட்சம் 12 காட்சிகளுக்கு திரையரங்கில் நுழைந்து மக்களிடம் விமர்சனங்களைப் பதிவு செய்யக் கூடாது. இது நடிகர் சங்கம் சார்பில் என் வேண்டுகோள். தியேட்டருக்கு வெளியே விமர்சனம் செய்துகொள்ளட்டும். ஆனால் தியேட்டருக்குள் வேண்டாம். இதற்கு திரையரங்க உரிமையாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொரு படமும் மூச்சுவாங்க வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த வாய்ப்பு தான் முதல் 12 காட்சிகள் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க: ‘விஷால்35’ படத்தின் ஷூட்டிங் பூஜை.. விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் துஷாரா விஜயன்!

விஷாலின் புதிய படம்

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் 99வது படமாக இந்தப் படம் உருவாகவிருக்கிறது. இந்தப் படத்தை ஈட்டி, ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, துஷாரா விஜயன் நடிக்கவிருக்கிறார். மார்க் ஆண்டனியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் விஷாலுடன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கிறார்.

இதையும் படிக்க : Theatrical Release Films : ‘பன் பட்டர் ஜாம் முதல் ட்ரென்டிங்’ வரை.. ஜூலை 18ல் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

திருமணம் குறித்து விஷால் விளக்கம்

ரெட் ஃபிளவர் இசை வெளியீட்டு விழாவில் விஷாலிடம் திருமணம் குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், எனது திருமணம் வருகிற ஆகஸ்ட் 29, 2025 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அது கொஞ்சம் தள்ளிப்போகிறது  என விஷால் தெரிவித்தார். நடிகர் சங்கம் கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் அதன் பிறகே எனது திருமணம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக 9 வருடங்களாக காத்திருக்கிறேன். இன்னும் இரண்டு மாதங்கள் தான்.  என் பிறந்த நாளில் நல்ல செய்தி வரும் என்று பேசினார்.