Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Coolie : கூலி படத்தின் 3வது பாடல் எப்போது? படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!

Coolie 3rd Single Update : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த்தின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் கூலிக்கு. இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், தற்போது படக்குழு 3வது பாடல் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளது.

Coolie : கூலி படத்தின் 3வது பாடல் எப்போது?  படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!
கூலி திரைப்படம் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 18 Jul 2025 11:15 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் 171வது திரைப்படமாக ரிலீசிற்கு காத்திருப்பதுதான் கூலி (Coolie) திரைப்படம். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க அவருடன், ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan), சத்யராஜ் (sathyaraj), நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திர ராவ், சவுபின் ஷாஹிர் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் (Aamir Khan) எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமும் பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இதுவரை சிக்கிட்டு வைப் மற்றும் மோனிகா என இரு பாடல்கள் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது.

இந்த பாடல்களை அடுத்ததாக, “பவர் ஹவுஸ்” (Power House )என்ற 3வது பாடல் ரிலீஸ் எப்போது என்பதைப் பற்றிப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூலி படத்தின் மூன்றாவது பாடல் வரும் 2025, ஜூலை 22ம் தேதியில், ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வெளியிடப்படக்குழு திட்டமிட்டுள்ளது. இரவு 9:30 மணி அளவில் இந்த 3வது பாடல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அதர்வாவின் அதிரடி திரில்லர்.. ‘தணல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு!

கூலி திரைப்படத்தின் 3வது பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

கூலி திரைப்படத்தின் கதை இதுவா :

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி படமானது பான் இந்திய படமாக வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. இன்னும் இப்படத்தின் ரிலீசிற்கு சில நாட்கள் மட்டும் உள் நிலையில், படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கூலி திரைப்படத்தின் கதைக்களம் இணையத்தில் கசிந்துள்ளது. லெட்டர்பாக்ஸ்டி என்ற இணையத்தில் இந்த படத்தின் கதை பற்றி தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் பழங்கால தங்க கடிகாரத்தை மறித்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்து, அதைத் திருடுவதற்குப் பல விஷயங்களைக் கையாளுகிறார்.

இதையும் படிங்க : ஃபகத் பாசில் வைத்திருக்கும் 17 வருட பழைய போன்.. அதன் விலை இத்தனை லட்சமா?

இந்த திருட்டானது அவரின் மூலம் வேலைக்காரர்களை மற்றும் சக ஊழியர்களையும் கதையுடன் இணைகிறது. அவர் பழைய சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்கவேண்டும் என்று நினைக்கும் நிலையில், அந்த சாம்ராஜ்யம் மிகவும் பெரியதாக மாறுகிறது. இந்த படமானது பேராசை மற்றும் போலியான குற்றம் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலானது கசிந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.