Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Maareesan : ‘மாரீசன்’ படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமை.. இத்தனை கோடிகளுக்கு விற்பனையா?

Maareesan Movie Update : மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் படம்தான் மாரீசன். இந்த படத்தில் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ளார். இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையைப் பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது, அதன் விவரம் குறித்து பார்க்கலாம்.

Maareesan : ‘மாரீசன்’ படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமை.. இத்தனை கோடிகளுக்கு விற்பனையா?
மாரீசன் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jul 2025 14:42 PM

நடிகர் ஃபகத் பாசில் (Fahadh Fasil) மற்றும் வடிவேலுவின் (Vadivelu) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாரீசன் (Maareesan). இந்த படத்தைப் பிரபல மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் (Sudheesh Shankar) இயக்கியுள்ளார். இவர் இயக்குநராக அறிமுகமாகும் தமிழ் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் (Super Good Films) நிறுவனம் மற்றும் ஏ.பி. இன்டர்நெஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்களும் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த படமானது முற்றிலும் வித்தியாசமாக, பயணம் மற்றும் பணம் திருட்டு தொடர்பான எமோஷனல் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பிரபல நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது , அது வேறுயெந்த நிறுவனமும் இல்லை திவ்யா மூவிஸ் (Divya Movies) நிறுவனம்தான். இந்த நிறுவனமானது மாரீசன் படத்தை சுமார் ரூ 7 கோடிகளைக் கொடுத்து வாங்கியுள்ளதாம். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :  இட்லி கடை மற்றும் தலைவன் தலைவி ஒரே கதையா? விளக்கம் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!

மாரீசன் படக்குழு வெளியிட்ட தமிழ் தியேட்டர் ரிலீஸ் நிறுவன அறிவிப்பு :

மாரீசன் படத்தின் ப்ரீ- புக்கிங் எப்போது :

நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலுவின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இப்படமானது, எமோஷனல், நகைச்சுவை மற்றும் பணம் கொள்ளை போன்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பல வருடங்களுக்குப் பின் நடிகை கோவை சரளாவும் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் வெளியாகிறது. இந்த படத்துடன் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க : பட்ஜெட் சிக்கல்… பிளாக்மைல் படத்தில் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த ஜி.வி. பிரகாஷ்!

இன்னும் இப்படத்தின் ரிலீசிற்கு சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இப்படத்தின் ட்ரெய்லரானது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் வரும் 2025 , ஜூலை 22ம் தேதி அல்லது 23ம் தேதியில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலுவுக்கு இப்படம் வெற்றி படமாக அமையும் எனக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.