Kaa The Forest: கிரைம் திரில்லர் கதையில்.. ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘கா தி ஃபாரஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
Kaa The Forest Movie Trailer : தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக கலக்கிவருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவரின் நடிப்பில் கடந்த 2 ஆண்டுங்களுக்கு முன் வெளியாகவிருந்த படம்தான் கா தி ஃபாரஸ்ட். க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா (Andrea Jeremiah) தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக மாஸ்க் (Mask) என்ற படமானது வெளியாகியிருந்தது. நடிகர் கவின் (Kavin) நாயகனாக நடித்திருந்த இப்படத்தில், ஆண்ட்ரியா ஜெரெமையா நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் அரசன் (Arasan) திரைப்படத்திலும் இவர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் வட சென்னை (Vada Chennai) படத்தின் பின்னணியில் உருவாகிவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இப்படத்தை அடுத்ததாக மேலும் சில புது படங்களில் இவர் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இவரின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டிலே வெளியீட்டிற்கு தயாரான படம்தான் “கா தி ஃபாரஸ்ட்” (Kaa The Forest). இயக்குநர் நாஞ்சில் (Nanjil) இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படம் சில பிரச்னைகளின் காரணமாக ரிலீஸ் செய்யப்படாமல் இருந் நிலையில், தற்போது இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் – அபிஷன் ஜீவிந்த்!
நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையாவின் கா தி ஃபாரஸ்ட் படத்தின் ட்ரெய்லர் குறித்து வைரலாகும் பதிவு
Kaa – The Forest Official Trailer Out Now!
Presented by P. Antony Doss MD (Sasikala Production) Produced by John Max Directed by Nanjil Shalom StudiosWatch now https://t.co/1hO6Xv8yRQ
#KaaTheForest@andrea_jeremiah#SalimGhouse
— Rajasekar (@sekartweets) February 1, 2026
இந்த கா தி ஃபாரஸ்ட் படத்தை அறிமுக இயக்குநர் நாஞ்சில் இயக்கியுள்ள நிலையில், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார். இதில் ஆண்ட்ரியா மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் அவருடன் நடிகர் சலீம் கௌஸ் இணைந்து நடித்துள்ளார். இந்த கா தி ஃபாரஸ்ட் படத்தில் நடிகை ஆண்ட்ரியா போட்டோகிராஃபர் வேடத்தில் நடித்துள்ளார். ஒரு காட்டிற்கு போட்டோஷூட்டிற்காக சென்ற இவர் அங்கும் மாட்டிக்கொள்ளும் விஷயம் மற்றும் அதிலிருந்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
இதையும் படிங்க: ரிலீஸ் தேதியை லாக் செய்த சசிகுமாரின் ‘மை லார்ட்’ படக்குழு.. வெளியான அறிவிப்பு இதோ!
இப்படமானது முற்றிலும் க்ரைம் திரில்லர் மற்றும் எதிர்பாராத டுவிஸ்ட் கலந்த கலவையாக உருவாகியுள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திலே வெளியாகும் என ஆரம்பத்தில் அறிவித்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்தில் நிதி பிரச்சனையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 1ம் தேதியில் இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்ட நிலையில், ரிலீஸ் தேதியை இன்னும் குறிப்பிடவில்லை.