Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

My Lord: ரிலீஸ் தேதியை லாக் செய்த சசிகுமாரின் ‘மை லார்ட்’ படக்குழு.. வெளியான அறிவிப்பு இதோ!

My Lord Movie Release Date : நடிகர் சசிகுமார் மற்றும் சைத்ரா ஜே ஆச்சார் நடிப்பில் உருவாகிவந்த படம்தான் மை லார்ட். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றநிலையில், அதனைத் தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

My Lord: ரிலீஸ் தேதியை லாக் செய்த சசிகுமாரின் ‘மை லார்ட்’ படக்குழு.. வெளியான அறிவிப்பு இதோ!
மை லார்ட் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Feb 2026 16:26 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் சசிகுமார் (Sasikumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடந்து வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist family). இதை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abhisan Jeevinth) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தை அடுத்தாக ப்ரீடம் (Freedom) போன்ற படத்தில் சசிகுமார் நடித்துவந்த நிலையில், அந்த வரிசையில் இவர் நடித்த படம்தான் மை லார்ட் (My Lord). இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் (Raju Murugan) இயக்க, ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 3BHK படத்தில் நடித்த நடிகை சைத்ரா ஜே ஆச்சார் (Chaithra J Achar) நடித்துள்ளார். இப்படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டிருந்தது.

இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பிற்கு முன்னே ட்ரெய்லர் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த மை லார்ட் படமானது வரும் 2026 பிப்ரவரி 13ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பராசக்தி படத்திலிருந்து வெளியானது நமக்கான காலம் பாடல் வீடியோ!

சசிகுமாரின் மை லார்ட் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சசிகுமாரின் இந்த மை லார்ட் படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளது. எமோஷனல், காதல் மற்றும் நகைச்சுவை என இப்படமானது சிறப்பாகவே அமைந்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. இவர் ஏற்கனவே ஜப்பான், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அன்பறிவ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்தின் சூப்பர் அப்டேட் இதோ!

இப்படமானது சமூக கருத்துக்களை பேசும் படமாக அமைந்திருக்கும் நிலையில், வரும் 2026 பிப்ரவரி 13ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தின் ப்ரீ புக்கிங்கும் வரும் 2026 பிப்ரவரி 10ம் தேதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2025ம் ஆண்டு டூரிஸ்ட் பேமிலி படம் போல 2026ம் ஆண்டில் மை லார்ட் படம் சசிகுமாருக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.