Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

D55: தனுஷின் ‘டி55’ படத்தில் கதாநாயகியாக களமிறங்கும் ஸ்ரீலீலா!

Dhanush D55 Movie Actress Update : அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம்தான் டி55. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

D55: தனுஷின் ‘டி55’ படத்தில் கதாநாயகியாக களமிறங்கும் ஸ்ரீலீலா!
ஸ்ரீலீலா மற்றும் தனுஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Jan 2026 18:12 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என பல்வேறு பணிகளை செய்துவருபவர் தனுஷ் (Dhanush).  இவர் சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) கர (Kara) என்ற படத்தில் நடித்துவந்த நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக இவர் நடிக்கவுள்ள புது படம்தான் டி55 (D55). இந்த திரைப்படத்தை அமரன் (Amaran) படத்தை இயக்கிய வெற்றிக்கு கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கவுள்ளார். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்ட நிலையில், இதனை முதலில் தயாரிக்கவிருந்த தயாரிப்பு நிறுவனம் பட்ஜெட் காரணமாக விலகிவிட்டது. இந்நிலையில் தற்போது தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.டேக் ஸ்டூயோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் யார் எனரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த டி55 படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக தெலுங்கு பிரபல நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடிக்கவுள்ளார். இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், தனுஷுடன் தனது 2வது தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். முதலில் சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஷாருக்கானிடமிருந்து அதை எப்போதும் கவனித்திருக்கிறேன் – தளபதி விஜய்!

தனுஷின் டி55 படத்தின் கதாநாயகி அறிவிப்பு குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணியில் வெளியான பராசக்தி படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே சூர்யா, கார்த்தி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் படத்திற்கு இசையமைத்துவரும் நிலையில், தனுஷின் டி55 படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

இதையும் படிங்க: தூசி தட்டப்படும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படம்… ரிலீஸ் குறித்து வெளியான அப்டேட்

இதன் காரணமாக இப்படத்தின் பாடல்கள் மீதும் பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2026 பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அல்லது மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் தொடங்குகிறதாக வட்டாரங்கள் கூறுகிறது. இது குறித்தும் படக்குழு விரைவில் அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.