Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhanush: இது ஒரு உண்மையான மரியாதை.. தமிழ்நாடு திரைப்பட விருது அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்த தனுஷ்!

Dhanush X Post: நடிகர் தனுஷின் நடிப்பில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான வட சென்னை படத்திற்காக தமிழ்நாடு திரைப்பட விருதுகள் தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் பதிவை வெளியிட்டுள்ளார்.

Dhanush: இது ஒரு உண்மையான மரியாதை.. தமிழ்நாடு திரைப்பட விருது அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்த தனுஷ்!
தனுஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Jan 2026 16:07 PM IST

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் முன்னணி நாயகனாக கலக்கிவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழில் மிக பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) என்ற இந்தி படமானது வெளியாகியிருந்தது. இப்படம் கடந்த 2025ம் ஆண்டு நவம்பரில் வெளியான நிலையில் சுமார் ரூ 150 கோடிகளை கடந்தும் திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்திருந்தது. இப்படத்தை தொடர்ந்து புது படங்களிலும் தனுஷ் நடித்துவருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்  (Tamil Nadu Film Awards 2016-2022) சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனுஷிற்கு கடந்த 2018ம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருது (Best Actor) வட சென்னை (Vada Chennai) படத்திற்காக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இவரின் அசுரன் (Asuran) படத்திற்கும் 2019ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படம் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் திரைப்பட விருதுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எனது வாழ்க்கையிலே ஒரே நாளில் ஓகே சொன்ன படம் இதுதான்- அனஸ்வரா ராஜன் பேச்சு!

தமிழ்நாடு திரைப்பட விருதுகள் குறித்து தனுஷ் நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட பதிவு:

இந்த பதிவில் நடிகர் தனுஷ், “வட சென்னை படத்திற்காக எனக்கு மாநில விருதை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு உண்மையான மரியாதை. மற்ற விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என அந்த பதிவில் நடிகர் தனுஷ் எழுதியுள்ளார். தற்போது இது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தமிழ்நாடு திரைப்பட விருதுகள் 2026 எப்போது நடைபெறுகிறது?

இந்த தமிழ்நாடு திரைப்பட விருதுகள் அறிவிப்பில், சினிமா துறை மட்டுமில்லாமல் பல்வேறு துறையிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகள் வரை கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சினிமாவில் சிறந்த நடிகர்கள், நடிகைகள், படங்கள், இசையமைப்பாளர் என பல்வேறு கேட்டகிரியில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சங்கரின் வேள்பாரி படத்தில் இரண்டு நாயகனா? எந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் தெரியுமா?

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது வரும் 2026 பிப்ரவரி 13ம் தேதியில் மாலை 4:30 மணியளவில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாம். இந்த விருதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.