சங்கரின் வேள்பாரி படத்தில் இரண்டு நாயகனா? எந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் தெரியுமா?
Velpari Movie Update: தென்னிந்திய சினிமாவில் சிறந்த மற்றும் பிரம்மாண்ட இயக்குநர் என்று போற்றப்படுபவர் எஸ். சங்கர். இவர் தமிழில் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் வரலாற்றுக் காவியமான வேள்பாரி கதையை படமாக எடுக்கவுள்ளார். அந்த படத்தில் இரு நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது யார் என பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட இயக்குநர் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருபவர் இயக்குநர் எஸ். சங்கர்தான் (S.Shankar). இவர் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளார். இந்திய அளவில் ரோபோவை மையமாக கொண்டு எந்திரன் என்ற படத்தை இயக்கி, பான் இந்தியா அளவிற்க்கு பிரபலமானார் இவர். அந்த வகையில் இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் ராம் சரண் (Ram Charan) வரை பல்வேறு உச்ச நடிகர்களை கொண்டும் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் வெளியான படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சமீப ஆண்டுகளாக இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான படங்கள் கடும் தோல்வியை சந்தித்துவந்தது. இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான இந்தியன் 2 (Indian 2) மற்றும் ராம் சரணின் கேம் சேஞ்சர் (Game Changer) போன்ற படங்கள் இவருக்கு கடும் தோல்வியை கொடுத்திருந்தது. அந்த விதத்தில் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக எந்த படங்களையும் இவர் இயக்க முன்வரவில்லை.
இந்நிலையில் இவர் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் “வேள்பாரி நாவலை” (Velpari) படமாக எடுக்கவுள்ளதாக ஒரு நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்படம் மிக பிரம்மாண்ட வரலாற்று படமாக அமையவுள்ள நிலையில், இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தில் 2 நடிகர்கள் நாயகனாக நடிக்கவுள்ளார்களாம். அவர்கள் வேறுயாருமில்லை தமிழ் நடிகர் சியான் விக்ரம் (Chiyaan Vikram) மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh) தான். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.




இதையும் படிங்க: மகேஷ் பாபு – ராஜமௌலியின் வாரணாசி பட ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!
வேள்பாரி படம் குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் போஸ்ட் :
As Per VP,
BIG UPDATE on #Velpari 🔥
🎬 Director #Shankar has finalized a producer for his dream project Velpari ✨
🦁 Talks are currently on with #RanveerSingh & #ChiyaanVikram to play the lead roles
⚔️ The film will be made as a DUAL HERO story 💥
🤝 The long-awaited combo… pic.twitter.com/IieU5O860F— Movie Tamil (@_MovieTamil) January 29, 2026
இந்த வேள்பாரி படத்தை இயக்குநர் சங்கர் வரலாற்று காவியமாக இயக்கவுள்ள நிலையில், கிட்டத்தட்ட ரூ 600 முதல் 700 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இவரின் இயக்கத்தில் இறுதியாக தி கேம் சேஞ்சர் படமானது ரூ 500 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், திரையரங்குகளில் வெறும் ரூ 150 கோடிகள் வரை மட்டுமே வசூலித்திருந்தது. இதையடுத்தாக இந்த வேள்பாரி படத்தை இவர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனுஷின் டி55 படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பென் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க வுள்ளதாக, இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது அனிருத் இசையமைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.