Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Soundarya Rajinikanth: என் அப்பா தனது சுயசரிதையை எழுதத் தொடங்கிவிட்டார்.. அது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தும் – சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Soundarya Rajinikanth About Rajinikanth Autobiography : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் ரஜினிகாந்த். சினிமாவில் சுமார் 50 வருடத்தை கடந்தும் படங்களில் கதாநாயகனாகவே நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் தனது சுயசரிதையை எழுத துவங்கியுள்ளதாக அவரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Soundarya Rajinikanth: என் அப்பா தனது சுயசரிதையை எழுதத் தொடங்கிவிட்டார்.. அது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தும் – சௌந்தர்யா ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Jan 2026 22:35 PM IST

கோலிவுட் சினிமாவில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பிரபலமானவர் சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth). இவர் சுமார் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) 2வது மகள் ஆவார். இவர் தனது தந்தை ரஜினிகாந்த்தைக் கொண்டே கோச்சடையான் (Kochadaiiyaan) என்ற அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் கடந்த 2014ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த படத்தை அடுத்தாக சௌந்தர்யா ரஜினிகாந்த் பெரிதாக எந்த திரைப்படங்களையும் இயக்கவில்லை. அந்த வகையில் தமிழில் பல ஆண்டுகளுக்கு பின் இவர் தயாரித்துவரும் புது படம்தான் வித் லவ் (With Love). இந்த படத்தில் இயக்குனரும், அறிமுக நடிகருமான அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth) நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த ப்ரோமோஷனின்போது பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது தந்தை ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுத துவங்கியுள்ளார் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது தங்கமே தங்கமே பாடலின் லிரிக்கல் வீடியோ

ரஜினிகாந்த் சுயசரிதை குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு :

அந்த நேர்காணலில் பேசிய சௌந்தயரா ரஜினிகாந்த், அதில் “என் அப்பா இப்போது தனது சுயசரிதையை எழுதத் தொடங்கியுள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு நிச்சயமாக உலகளாவிய பரபரப்பை ஏற்படுத்தும். என் அப்பா சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாட படையப்பா படத்தை ரீ- ரிலீஸ் செய்திருந்தோம்.

இதையும் படிங்க: ‘தாய் கிழவி’ பட ராதிகாவின் கதாபாத்திரம் – மேக்கிங் வீடியோ வெளியீடு!

அதை அவரின் ரசிகர்களும் முழு மனதோடு கொண்டாடியிருந்தனர். ஆனால் ஏன் அதை ஒரு பிரம்மாண்ட நிகழ்வாக மாற்றவில்லை என மக்கள் கேட்கும்போது, அதற்கு என்ன விளக்கம் கொடுக்கவேண்டும் என எனக்கு தெரியவில்லை” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த் சுயசரிதை குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறிய பதிவு:

சௌந்தர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் காலடி வைத்துள்ளார். இந்த வித் லவ் படமானது வரும் 2026 பிப்ரவரி 6ல் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் வெற்றியை அடுத்தாக மேலும் படங்களை தயாரிப்பார் அல்லது இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.