இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது தங்கமே தங்கமே பாடலின் லிரிக்கல் வீடியோ
Thangame Thangame Song Lyrical Video | நடிகர் அதர்வா முரளி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இதயம் முரளி. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வரும் நிலையில் படத்தில் இருந்து லிரிக்கள் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மகனாக அறிமுகம் ஆனார் நடிகர் அதர்வா முரளி. அதன்படி தமிழ் சினிமாவில் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகர் அதர்வா முரளி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு முதல் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இறுதியாக வெளியான படம் பராசக்தி. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
அதனைத் தொடர்ந்து நடிகர் அதர்வா முரளி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் இதயம் முரளி. இந்தப் படத்தில் அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படத்தில் இருந்து தங்கமே தங்கமே என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.




வெளியானது தங்கமே தங்கமே பாடலின் லிரிக்கள் வீடியோ:
இந்த இதயம் முரளி படத்தினை இயக்குநர் ஆகாஸ் பாஸ்கரன் இயக்கி உள்ளார். மேலும் இவரே இந்தப் படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து தங்கமே தங்கமே என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
Also Read… தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்… ஜன நாயகன் படக்குழு எடுக்கப்போகும் முடிவு என்ன – வைரலாகும் தகவல்
இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
When love sparks in a wedding, there’s no stopping the celebration ❤️🔥
Thangame Thangame, second single from #IdhayamMurali out now
▶️ https://t.co/cE2cedidDX@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran @natty_nataraj @PreityMukundan @JustNiharikaNm @11Lohar @manojdft… pic.twitter.com/UtQexnTdKE
— DawnPictures (@DawnPicturesOff) January 28, 2026
Also Read… பராசக்தி படத்திலிருந்து வெளியானது ரத்னமாலா பாடலின் வீடியோ!