நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியானது ரவுடி & கோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Rowdy & Co Movie First Look Poster: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் ரவுடி & கோ. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடிகராக நடித்து வருகிறார் நடிகர் சித்தார்த். இவர் நடிகராக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் அடுத்து பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வந்த நடிகர் சித்தார்த் பிறகு தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்தது போல தெலுங்கு சினிமாவிலும் நடிகர் சித்தார்த் நடிப்பில் அதிக அளவில் படங்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தெலுங்கு சினிமாவிலும் சித்தார்த்திற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியானது. இதில் இறுதியாக திரையரங்குகளில்வ் எளியான 3 BHK படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




வெளியானது ரவுடி & கோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் தற்போது உருவாக உள்ள படம் ரவுடி & கோ. இந்தப் படத்தை இயக்குநர் இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ் எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து நடிகர்கள் ராஷி கன்னா, சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று 26-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அனிமல் படத்தின் பார்ட் 2 எப்போது தொடங்கும் – நடிகர் ரன்பீர் கபூர் ஓபன் டாக்
ரவுடி & கோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Recruitment closed. Chaos unlocked.
The New Rowdy batch is here 👊🏻🔥#RowdyAndCo FIRST LOOK 😈#Siddharth @Karthik_G_Krish @passionstudios_ @sudhans2017 @revaamusic @aravinndsingh @KSamy1878915 @PradeepERagav @Sureshchandraa @tuneyjohn @PharsFilm @abdulnassaroffl @donechannel1 pic.twitter.com/06NlQs7X9G— Passion Studios (@PassionStudios_) January 26, 2026
Also Read… ஜன நாயகன் படத்தில் கேமியோ செய்துள்ள லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் விடீயோ