Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற சர்வம் மாயா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Sarvam Maya Movie OTT Update: மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் சர்வம் மாயா. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற சர்வம் மாயா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
சர்வம் மாயாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jan 2026 14:54 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சர்வம் மாயா. கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தினை இயக்குநர் அகில் சத்யன் எழுதி இயக்கி இருந்தார். சூப்பர் நேச்சுரல் காமெடிப் படமாக உருவாகி வெளியான இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை ரியா ஷிபு நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்த சர்வம் மாயா படத்தில் நடிகர்கள் அஜு வர்கீஸ், ப்ரீத்தி முகுந்தன், ஜனார்த்தனன், ரகுநாத் பலேரி, அருண் அஜிகுமார், மது வாரியார், வினீத், ஆனந்த் ஏகர்ஷி, மெத்தில் தேவிகா, ஜெய குருப், விஜீஷ், அல்தாஃப் சலீம், சௌம்யா பாக்யன் பில்லா, ஸ்ரீகாந்த் பட்ஷோக், ரேஷ்மி போபன், நிகண்டன் முரளி, அணியப்பன், மணிகண்டன் முரளி, சலீம் மரிமயம், பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் அல்போன்ஸ் புத்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஃபயர்ஃப்லை ஃபிலிம்ஸ் மற்றும் அகில் சத்யன் பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் அஜய்ய குமார் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்வம் மாயா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலிக்கு ஒரு கம்பேக்காக அமைந்துள்ளது இந்த சர்வம் மாயா படம். பல ஆண்டுகளாக இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுக்க முடியாமல் இருந்த நிவின் பாலிக்கு இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சர்வம் மாயா படம் வருகின்ற 30-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Raed… தளபதி விஜய் என் மீது வைத்த நம்பிக்கையில் தான் கோட் படம் உருவானது – வெங்கட் பிரபு

சர்வம் மாயா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Raed… சியான் 63 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்