டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அந்த கேரக்டர் நான் நடிக்க வேண்டியது – கென் கருணாஸ் ஓபன் டாக்
Actor Ken Karunas: காமெடி நடிகர் கருணாஸின் மகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் கென் கருணாஸ். அதனைத் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பலப் படங்களில் நடித்த கென் கருணாஸ் தற்போது தானே படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது கேரக்டர் ஆர்டிஸ்டாக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகராக மட்டும் இன்றி அரசியல்வாதியகவும் வலம் வருகிறார். தொடர்ந்து சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்த நடிகர் கருணாஸ் பிறகு நாயகன்களின் நண்பராக காமெடி கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொட்ர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. கடந்த சில ஆண்டுகளாக காமெடியனாக இல்லாமல் கேரக்டர் ஆர்டிஸ்டாக வலம் வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் கென் கருணாஸ் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பிறகு நாயகன்களின் மகனாக நடித்து வந்த இவர் தற்போது தானே படம் இயக்கி அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
அதன்படி இவர் தற்போது இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் யூத். இந்தப் படத்தில் கென் கருணாஸ் உடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான கென் கருணாஸ் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.




டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நான் நடிக்க வேண்டியது:
அபிஷன் அண்ணா ‘வித் லவ்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ‘யூத்’ படத்தின் கதையை அவரிடம் கூறி, அவருடைய கருத்துக்களைப் பெற்றேன். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் மிதுன் கதாபாத்திரத்தின் கதை முதலில் என்னிடம் தான் கூறப்பட்டது, ஆனால் நான் ‘விடுதலை 2’ படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தேன் என்று கென் கருணாஸ் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமில் படத்தின் மிதுன் கதாப்பாத்திரம் நடிகர் சசிகுமாரின் மூத்த மகன் கதாப்பாத்திரம் என்பது ஆகும். இந்த வேடத்தில் மலையாள நடிகர் மிது ஜெய் சங்கர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேட்டி தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… Sudha Kongara: புறநானூறு என்ற டைட்டில் பராசக்தியாக மாறியது இப்படித்தான்- சுதா கொங்கரா!
இணையத்தில் வைரலாகும் கென் கருணாஸ் பேட்டி:
“So happy #AbishanJeevinth Anna is debuting as a hero with #WithLove.
I even shared my Youth script and got his inputs,” says #KenKarunaas, adding that they both exchanged scripts for roles — love this healthy bonding between young talents 💥 pic.twitter.com/ENLN0209IP
— Kollywood Now (@kollywoodnow) January 20, 2026