நடிகை அசினின் 10-வது திருமண நாள்… கணவர் பகிர்ந்த எக்ஸ்குளூசிவ் திருமணப் புகைப்படம்
Actress Asin Celebrate 10th wedding anniversary: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவர் தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக. இந்தப் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை அசின். தொடர்ந்து மலையாள சினிமாவில் பலப் படங்களில் நடித்து வந்த நடிகை கடந்த 2004-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான எம். குமரன், சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தான் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், சூர்யா மற்றும் கமல் என பலருடன் இணைந்து பலப் படங்களில் நடித்து இருந்தார்.
அதன்படி இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசாவதாரம், காவலன் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே நடிகை அசின் தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இவர் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




நடிகை அசினின் 10-வது திருமண நாள் – வைரலாகும் போட்டோ:
இந்த நிலையில் நடிகை அசின் 10-வது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது கணவர் ராகுல் வெளியிட்ட எக்ஸ் தள ப்திவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில், 10 ஆனந்தமான ஆண்டுகள்… என் வாழ்க்கையில் முக்கியமான எல்லாவற்றிற்கும் அவள்தான் அற்புதமான இணை நிறுவனர், மேலும் அவளுடைய வாழ்க்கையில் ஒரு இணை நட்சத்திரமாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது என் பாக்கியம்! என் அன்பே, 10வது ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள். நீ நம் வீட்டையும் என் இதயத்தையும் ஒரு அதிவேகமாக வளரும் ஸ்டார்ட்அப் போல வழிநடத்த வேண்டும், நானும் ஒவ்வொரு நாளும் உன் வாழ்க்கை என்னும் படப்பிடிப்புத் தளத்தில் ஆஜராக வேண்டும். ஒன்றாக ஒரு அற்புதமான எதிர்காலத்தை நோக்கி! என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
நடிகை அசினின் கணவர் ராகுல் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
10 blissful years…
She’s the incredible co-founder of everything that matters in my life, and I’m fortunate to be cast as a co-star in hers!
Happy 10th anniversary, my love. May you run our home and my heart like a high-growth startup, and I show up on the set of your life… pic.twitter.com/rOIyXtyoyF
— Rahul Sharma (@rahulsharma) January 19, 2026
Also Read… அந்த ஒரு விசயத்துகாகவே விஜய் சிஎம் சீட்ல உக்கார்வதை பாக்கனும் – நடிகர் மகேந்திரன்