பிரதீப் ஆண்டனிக்கு நோ… கம்ருதின், பார்வதிக்கு யெஸ்… பிக்பாஸில் ரெட் கார்ட் வாங்கிய போட்டியாளர்கள் குறித்து பேசும் நெட்டிசன்கள்
Bigg Boss Tamil Season 9 Finale: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைப்பெற்று வரும் நிலையில் போட்டியில் முன்னதாக ரெட்கார்ட் பெற்று வெளியேறிய கம்ருதின் மற்றும் பார்வதி இருவரும் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பல நிகழ்வுகள் சர்சைகள் மக்களிடையே வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 1 தொடங்கிய போது தமிழ் மக்கள் பலருக்கும் இந்த நிகழ்ச்சி எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளவே பல நாட்கள் எடுத்துக்கொண்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலருக்கே நிகழ்ச்சி எப்படி செயல்படும் என்பது தெரியாததால் தொடர்ந்து பல குழப்பங்கள் நீடித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் தான் முதன் முறையாக போட்டியாளருக்கு ஆர்மி ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிக்பாஸ் என்றால் எப்படி இருக்கும் என்று மக்களுக்கும் போட்டியாளர்களுக்கும் ஒரு தெளிவோடு தொடங்கியதுதான் பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி. இதிலும் பல சண்டைகளும் சர்ச்சைகளும் இருந்து வந்த நிலையில் போட்டியாளர் மகத் சக போட்டியாளர்களை தவறாக நடத்தியதன் காரணமாகவும் வார்த்தைகளால் அவர்களை காயப்படுத்தியதன் காரணமாகவும் வீட்டில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டார்.
ரெட் கார்ட் பெற்று வெளியேறிய மகத் தொடர்ந்து அந்த இரண்டாவது சீசனில் ரெட் கார்ட் பெற்று வெளியேறி இருந்தாலும் இறுதிப் போட்டியில் மற்றப் போட்டியாளர்களுடன் அவர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 3, 4, 5, 6-வது சீசன் வரை பல நிகழ்வுகள் நடைப்பெற்றாலும் ரெட் கார்ட் என்ற நிகழ்வு நடைபெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 7-வது சீசன் தொடங்கிய போது போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து சக போட்டியாளரான பிரதீப் ஆண்டனியால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி தொகுப்பாளர் கமல் ஹாசனிடம் முறையிட்ட பிறகு போட்டியாளர்களின் தேர்வால் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்டார். ஆனால் பிரதீப் மொத்தமாக அந்த சீசனில் 20 நாட்கள் கூட இல்லை என்றாலும் அவரை மக்களுக்கு மிகவும் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதீப்பிற்கு ஆதவரவாக பேசியே வைல்கார்ட் போட்டியாளராக வந்த அர்ச்சனா அந்த சீசனில் வெற்றியாளராக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் ரெட் கார்ட் வாங்கியவர்கள் குறித்து பேசும் நெட்டிசன்கள்:
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பார்வதி மற்றும் கம்ருதினுக்கு ஒரே நேரத்தில் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று நடைபெறும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் கலந்துகொண்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் 7-வது சீசனில் அதாவது கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய சீசனில் பிரதீப் ஆண்டனியை வரவைக்கவோ அல்லது அவரைக் குறித்து பேசவோ இல்லாதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… Karthi: கைதி 2 படத்தின் நிலைமை என்ன? கார்த்தி கொடுத்த ஷாக் பதில் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
Also Read… மலையாள சினிமாவில் பெண்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய படம் கப்பேலா