AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ரவி.. நேரில் சந்தித்து பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்..

CM MKStalin met Governor Ravi: மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 அன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ரவி.. நேரில் சந்தித்து பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்..
முதல்வர் ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Mar 2026 14:37 PM IST

சென்னை, மார்ச் 07: தமிழ்நாட்டில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி விடைபெறும் நிலையில், இன்று அவரை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கேரள ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி, தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக அவரை நேரில் சந்தித்துள்ளார்.

இதையும் படிக்க : போடி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ்?.. மகன் ரவீந்தரநாத் அறிவாலயத்தில் விருப்ப மனு!

திருவள்ளுவர் சிலை பரிசளித்த முதல்வர்:

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சால்வை அணிவித்து திருவள்ளுவர் சிலையை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே பல விஷயங்களில் கருத்துப்போரும் இருந்து வந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததும் அதுதொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மேற்குவங்க ஆளுநராக நியமனம்:

மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 அன்று ராஜிநாமா செய்தார். இதையடுத்து மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநா் பொறுப்பை கேரள மாநில ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கூடுதலாக வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

15வது ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்:

தமிழ்நாட்டின் 15 ஆவது ஆளுநராக ஆர்.என்.ரவி, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பொறுப்பேற்றார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிப்பதில் உள்நோக்கம் உள்ளதாக அரசியல் கட்சிகள் அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, தலைமைச் செயலாளர் இறையன்புவை அழைத்த ஆளுநர், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறைவாரியாக அறிக்கை கேட்டு உத்தரவிட்டார்.

இதையும் படிக்க : தேமுதிக கனவு நிறைவேறியது… நாடாளுமன்றம் செல்லும் கட்சியின் முதல் எம்.பி.. யார் இந்த எல்.கே.சுதீஷ்!

சர்ச்சைகளில் சிக்கிய ஆளுநர்:

இது மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் நேரடியாகத் தலையிடுவதாகக் கூறி, ஆளுங்கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் அதிரடியாக நீக்கினார். பின்னர், தமிழக அரசின் எதிர்ப்பால் இந்த உத்தரவை அவரே திரும்பப் பெற்றார். இதேபோன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினார்.

Follow Us