மலையாள சினிமாவில் பெண்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய படம் கப்பேலா
Kapela Movie OTT Update: மலையாள சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கப்பேலா. இந்தப் படம் பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக உள்ள நிலையில் அதனை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டும் இன்று சமூகத்திற்கு தேவையான பல கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றது. அந்த வகையில் மக்களுக்கு தேவையான பல விசயங்கள் சினிமா மூலம் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றது. இது சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே தொடர்ந்து நடைப்பெற்று வரும் விசயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் குறித்தும் அந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம். அதன்படி மலையாள சினிமாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கப்பேலா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர்கள் அன்னா பென், ஸ்ரீநாத் பாசி, ரோஷன் மேத்யூ, சுதி கொப்பா, தன்வி ராம், விஜிலேஷ் கரையாட், நிஷா சாரங், ஜேம்ஸ் எலியா, நில்ஜா கே பேபி, முஹம்மது முஸ்தபா, சுதீஷ், சலாம் பாப்பு பாலபெட்டி, நவாஸ் வல்லிக்குன்னு, முகமது எரவத்தூர், ஜாலி சிராயத், நசீர் சங்கராந்தி, ஸ்மிதா அம்பு, அஸ்வானி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கதாஸ் அண்டோல்ட் சார்பாக தயாரிப்பாளர் விஷ்ணு வேணு படத்தை தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
கப்பேலா படத்தின் கதை என்ன?
இந்தப் படத்தில் தனது அம்மா, அப்பா மற்றும் தங்கை உடன் கிராமத்தில் வசிக்கும் பெண்ணாக இருக்கிறார் அன்னா பென். இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் அம்மாவிற்கு உதவியாக இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் வீட்டில் அன்னா பென் தனியாக இருக்கும் போது ஒரு தெரியாத மொபைல் எண்ணில் இருந்து கால் வருகிறது.




Also Read… ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் சூப்பர்ஹிட் படம் மௌனம் பேசியதே… எப்போது தெரியுமா?
அந்த காலில் பேசிய பிறகு அந்த ராங் நம்பர் கொண்ட நபருடன் அன்னா பென்னிற்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலை நம்பி ஊரைவிட்டு வெளியேறும் அன்னா பென்னிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. அந்த நபர் பெண்களை ஏமாற்றி கடத்தி சென்று விற்கும் நபர் என தெரியவருகிறது. இப்படி இருக்கும் சூழலில் அன்னா பென் அவரிடம் இருந்து எப்படி தப்பித்தார். மீண்டு அவரது ஊரிற்கே சென்றாரா என்பது படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விஜயின் தளபதி கச்சேரி பாடலின் லிரிக்கள் வீடியோ