Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் சூப்பர்ஹிட் படம் மௌனம் பேசியதே… எப்போது தெரியுமா?

Mounam Pesiyadhe Movie Re Release: தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் ஹிட் அடித்த மௌனம் பேசியதே படமும் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் சூப்பர்ஹிட் படம் மௌனம் பேசியதே… எப்போது தெரியுமா?
மௌனம் பேசியதேImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jan 2026 14:36 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மௌனம் பேசியதே. இயக்குநர் அமீர் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இது இயக்குநர் அமீர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் எனபது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இந்தப் படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். இவர் முன்னதாக ஜோடி படத்தில் நாயகியின் தோழியாக நடித்து இருந்தார். மேலும் இந்த மௌனம் பேசியதே படம் தான் அவர் தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேறபைப் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் த்ரிஷா உடன் இணைந்து நடிகர்கள் நந்தா, நேஹா, அஞ்சு மகேந்திரன், துரைப்பாண்டி, வைத்தியநாதன், வி.சி.வெங்கடேஷ், கோபிகுமார், நந்தா சரவணன், கோவிந்தராஜ், கமலேஷ், செந்தில், ஜான்பிரகாஷ், மாஸ்டர் தருண் குமார், விஜி, விஜயலட்சுமி, லட்சுமி, வைஷ்ணவி, ஹேமலதா, ஸ்வேதா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் மௌனம் பேசியதே:

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா காதல் என்றாலே கடுப்பாகும் நபராக நடித்து இருப்பார். இவரைச் சுற்றி இவரது நண்பர்கள் காதலித்துவ் அந்தால் கூட அவர்களின் காதலை பிரித்துவிடும் நபராக இருந்து வந்த நிலையில் நடிகை த்ரிஷா தன்னை காதலிப்பதாக தவறாக நினைத்துவிடுவார்.

பின்புதான் தன்னை கல்லூரியில் படிக்கும் போது இருந்தே லைலாதான் காதலித்து வந்தார் என்பது தெரியவரும். இந்தப் படத்தில் காதல் என்றால் என்ன என்று நடிகர் சூர்யா பேசும் வசங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தற்போது வரை வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… VibewithMKS: பாடகி பிரியங்காவுடன் பாட்டுப்பாடிய முதல்வர்… வைரலாகும் வீடியோ

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த பிரபலங்கள்… வைரலாகும் போட்டோஸ்