Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

VibewithMKS: பாடகி பிரியங்காவுடன் பாட்டுப்பாடிய முதல்வர்… வைரலாகும் வீடியோ

CM Meets Musicians: தைப் பொங்கலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வைப் வித் எம்கேஎஸ் நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அவர் தனக்கு பிடித்த பாடல்களை தெரிவித்த அவர், பாடல் பாடியும் மகிழ்வித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VibewithMKS: பாடகி பிரியங்காவுடன் பாட்டுப்பாடிய முதல்வர்… வைரலாகும் வீடியோ
முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரியங்கா
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Jan 2026 16:22 PM IST

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) ஜனவரி 15, 2026 அன்று பொங்கலை முன்னிட்டு பங்கேற்ற வைப் வித் எம்கேஎஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அவர் பல்வேறு இசைக்கலைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியை பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி தொகுத்து வழங்கினார். அப்போது முதல்வர் தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களையும், இசையுடன் உள்ள தன் ஆழ்ந்த உறவையும் மனம் திறந்து பகிர்ந்துகொண்டார். மேலும் தனக்கு பிடித்த பாடல்களையும் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடியும் மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விண்டேஜ் கார் ஓட்டிய அனுபவம்

இந்த நிகழ்ச்சியில் பாடலாசிரியர் மதன் கார்க்கி,  சமீபத்தில் பழைய வின்டேஜ் காரில் பயணம் செய்த அனுபவம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர், தலைவர் மு.கருணாநிதியுடன் பெங்களூரு சென்றபோது, சினிமா பாடல் கள் எழுதுவதற்காக அங்கு தங்கியிருந்தோம். அப்போது நான் பள்ளி மாணவன். அப்போது ஃபியாட் செலக்ட் காரில் என்னை அழைத்துச் சென்று ஓட்டக் கற்றுக் கொடுத்தார்கள் என்றார்.

இதையும் படிக்க : புதிய காருக்கு திருஷ்டி சுற்றிய குடும்பம்.. எலுமிச்சையால் வந்த சிக்கல்.. பரபரப்பு சம்பவம்!

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், எனக்கு வாகனம் ஓட்டுவதில் தனிப்பட்ட விருப்பம் உண்டு. முதல்வராக ஆன பிறகு ஓட்டுவதை நிறுத்திவிட்டேன். தினமும் தொல்காப்பியர் பூங்காவுக்கு நடைப்பயிற்சி செல்வேன். அங்கு அந்த பழைய காரைக் கொண்டு வந்திருந்தார்கள். அது அழகாக இருந்ததால், அதை ஓட்டிப்பார்த்தேன் என்றார்.

பாடல் பாடிய முதல்வர்

 

இதையும் படிக்க : தைப்பொங்கல் பண்டிகை.. தமிழர் வாழ்வு செழித்திட முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!

இதனையடுத்து பாடகி பிரியங்கா முதல்வரிடம் விரும்பி கேட்கும் பாடல்கள் குறித்து கேளவி எழுப்பினார்.அவருக்கு பதிலளித்த முதல்வர், பயணத்தின் போது கேசெட்டில் பழைய பாடல்களை பதிவு செய்து கேட்பேன். அப்போதும் இப்போதும் நான் கேட்பது பழைய பாடல்கள்தான். பழைய பாடல்களில் தான் வரிகளை கேட்க முடியும். இப்போது இசை தான் பிரதானமாக இருக்கிறது. அதனால் தான் 50 ஆண்டுகள் ஆகியும் பழைய பாடல்களை கேட்க முடிகிறது. என்றார்.

எம்ஜிஆர் பாடல்களைத் தான் விரும்பி கேட்பேன் என்றார். குறிப்பாக மன்னாதி மன்னன் படத்தில் வரும் அச்சம் என்பது மடமையடா பாடலை அடிக்கடி கேட்பேன். அதேபோல், ‘நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை’ என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடித்தது என்றார். அப்போது பாடகி பிரியங்கா அந்தப் பாடலைப் பாட, அவருடன் சேர்ந்து முதல்வரும் அந்தப் பாடலை பாடி மகிழ்ந்தார். இது இசைக் கலைஞர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.