மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ!!
Weather update: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 16 முதல் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று கூறியுள்ளது. அதோடு, தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பெரும்பாலும் இயல்பான அளவிலேயே இருக்கும்.
சென்னை, ஜனவரி 15: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மலை மாவட்டங்களல் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முடிந்த கையோடு, வடகிழக்கு பருவமழை
அடுத்த ஓரிரு நாட்களில் விலகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திகுறிப்பில், தென் தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் 2 நாட்களாக மழை பெய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்…கரும்பு ரூ.700-மல்லி கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை!
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு:
இதுகுறித்து வானிலை மையம் மேலும் கூறியதாவது, கிழக்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையான இன்று (ஜனவரி 15) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவித்துள்ளது. இதனைத் தவிர, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 16 முதல் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று கூறியுள்ளது. அதோடு, தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பெரும்பாலும் இயல்பான அளவிலேயே இருக்கும் என்றும், பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னை வாசிகளே…பொங்கல் விடுமுறைக்கு இங்க போங்க…செம என்ஜாய்மெண்ட்டா இருக்கும்!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 – 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.