AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாணவர்களுக்கு இலவச கல்வி முதல் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி வரை… விஜய் வெளியிட்ட அதிரடி தேர்தல் வாக்குறுதி!

TVK Election Promises : தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதுடன், விவசாயிகள் வீட்டில் உள்ள குழந்தைகள் படிப்புக்கான முழு செலவை அரசே ஏற்கும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வெளியிட்டார்.

மாணவர்களுக்கு இலவச கல்வி முதல் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி வரை… விஜய் வெளியிட்ட அதிரடி தேர்தல் வாக்குறுதி!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 04 Mar 2026 12:44 PM IST

தஞ்சாவூரில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசி இருந்தார். அப்போது, அரசு வேலை மட்டுமின்றி தனியார் வேலை வாய்ப்புகளுக்குமான வழி மற்றும் உத்தரவாதத்தை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால் அவர்களுக்கான வழியே இளைஞர்கள் அவர்களாகவே தேர்ந்தெடுத்து விடுவார்கள். உண்மையான திட்டங்களை ஒப்பந்தம் செய்வதுடன் அதற்கான வெள்ளை அறிக்கை வெளியிட்டால் எல்லாம் தானாகவே நடக்கும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் வாக்குறுதிகளில் சிலவற்றை விஜய் அறிவித்திருந்தார். இதில்,

மேலும் படிக்க: இந்த அணி.. அந்த அணி.. டெல்லி அணியை தவெக அடித்து நொறுக்கும்… தஞ்சாவூரில் விஜய் ஆவேசம்!

  • தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த உடன் உர தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் முழுமையாக ரத்து செய்வதற்கும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் 50 சதவீதம் வரை ரத்து செய்வதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் நிலம் இல்லாதவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில மற்றும் மத்திய அரசு பணிகளில் இல்லாத பட்சத்தில் அவர்களின் குழந்தைகள் பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்குமான முழு செலவை தமிழக அரசே ஏற்கும்.
  • விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக எந்த திட்டமாக இருந்தாலும், ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும், அந்த திட்டத்தை உங்களுடைய தமிழக வெற்றிக் கழக ஆட்சி முழுமையாக நிராகரிக்கும். எப்போதும் விவசாயிகளின் பக்கம் நமது ஆட்சி இருக்கும்.
  • கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதை நமது அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.
  • தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இதே போல, கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ, மூட்டைகளை ஏற்றி இறக்குவதற்கோ ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும்.
  • இதையும் மீறி கமிஷன் வாங்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயம் செய்யப்படும்.
  • கிராமங்களில் எடையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். பெண் விற்பனையாளர்களுக்கு பெண் எடையாளர்களும், ஆண் விற்பனையாளர்களுக்கு ஆண் எடையாளர்களும் என்பது பின்பற்றப்படும்.
  • ரேஷன் கடைகளில் அரிசியை தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்படும்.
  • மீனவர்களுக்கு ஒன்றிய அரசு சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான உண்மையான அழுத்தத்தை நமது தவெக அரசு அளிக்கும். கல்வி, மருத்துவம், ரேஷன், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நமது அரசு முக்கியத்துவம் அளிக்கும்.
  • பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: 6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள்.. யார் யாருக்கு வழங்கப்படும்.. பட்டியலில் உள்ள முக்கிய புள்ளிகள்!

Follow Us