தித்திக்கும் தைப்பொங்கல்.. தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டம்!!
2026 Thai Pongal; குறிப்பாக பொங்கல் திருநாள், தமிழக பாரம்பரியம், விவசாய மரபுகள் மற்றும் தமிழ் காலச்சாரத்தின் சான்றாகவும், தமிழர்களின் வாழ்வோடு ஒன்றாக கலந்த ஒரு நன்னாளாகவும் பார்க்கப்படுகின்றது. இந்த நாள் சூரியன் மகர ராசிக்கு மாறும் தருணத்தை குறிக்கின்றது. ஆகையால் இது மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
சென்னை, ஜனவரி 15: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஒவ்வொரு வருடமும் தைத்திங்கள் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் நம் வாழ்வுக்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக விளையும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, காலை வேளையில் வீட்டுப் முன்பு புத்தாடை அணிந்து மண்பானைகளில் சர்க்கரைப் பொங்கல் சமைத்து மக்கள் சூரியனுக்கு படைத்தனர். இதற்காக மண்பானைகளில் மஞ்சள் காப்பு அணிவித்து, பொங்கல் பொங்கியதும், பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதோடு, பொங்கல் பண்டிகையின் முக்கிய அங்கமாக கரும்புகளை வைத்தும் மக்கள் விழிப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்…கரும்பு ரூ.700-மல்லி கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை!
2000 ஆண்டுகளுக்கு பழமையானது:
பொங்கல் பண்டிகை 2000 ஆண்டுகளுக்கு பழமையானதாக கருதப்படுகிறது. குறிப்பாக பொங்கல் திருநாள், தமிழக பாரம்பரியம், விவசாய மரபுகள் மற்றும் தமிழ் காலச்சாரத்தின் சான்றாகவும், தமிழர்களின் வாழ்வோடு ஒன்றாக கலந்த ஒரு நன்னாளாகவும் பார்க்கப்படுகின்றது. இந்த நாள் சூரியன் மகர ராசிக்கு மாறும் தருணத்தை குறிக்கின்றது. ஆகையால் இது மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
இயற்கைக்கு நன்று செலுத்தல்:
இந்த நாளில் நாம் விவசாயிகளுக்கு நன்றி செலுத்துகிறோம். விவசாயிகள் தங்களுக்கு உதவிய சூரியன், பூமி, கால்நடைகள், இயற்கை ஆகியவற்றுக்கு நன்றி செலுத்துகிறார்கள். இது மட்டுமல்லாமல் பலர் ஒன்று கூடி பொங்கல் வைத்து புத்தாடை அணிந்து ஒருவருடன் ஒருவர் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு இந்த திருநாளை கொண்டாடுவதால் இது ஒற்றுமை, நன்றி உணர்வு மற்றும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் ஒரு நன்னாளாக பார்க்கப்படுகின்றது.
தை பிறந்தால் வழி பிறக்கும்:
12 தமிழ் மாதங்களில் தை மாதம் மிகச்சிறப்பு வாய்ந்தது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என கூறுவதுண்டு. அதாவது எவ்வளவு தடைகள் இருந்தாலும், எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், தை மாதம் பிறந்து விட்டால், அவை அனைத்தும் சரியாகி, தெளிவான பாதை அமைந்து நினைத்தது நடக்கும் என்பது பொருள். இப்படி இடர்களை களைந்து நன்மைகளை அளிக்கும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவும் நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அன்பையும் செழுமையையும் பொங்க வைக்கின்றது.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெக்கம், பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழா.
மேலும் படிக்க: உலக புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டி… 15,047 காளைகள்-5,234 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு
ஜல்லிக்கட்டு போட்டிகள்:
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீர விளையாட்டாகிய ஜல்லிக்கட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. அந்தவகையில், இன்று மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டின் போது நூற்றுக்கணக்கான காளைகளும், வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.