AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

படிப்படியாக உயரும் வெப்பநிலை.. 100 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெயில்.. மழை இருக்குமா?

அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். உள்நாட்டு மாவட்டங்களில் வெப்பம் சற்று அதிகமாக உணரப்படலாம். குறைந்தபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட குறைவாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் லேசான மேகமூட்டம் நிலவும்

படிப்படியாக உயரும் வெப்பநிலை.. 100 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெயில்.. மழை இருக்குமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Mar 2026 06:25 AM IST

வானிலை நிலவரம், மார்ச் 3, 2026: குமரி கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காணப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழை வாய்ப்பு மிகக் குறைவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும். வானம் பெரும்பாலும் தெளிவாகவோ அல்லது ஓரளவு மேகமூட்டத்துடனோ காணப்படும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

மார்ச் 6ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகள்) சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 7ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் சில இடங்களில் லேசான தூறல் மட்டுமே இருக்கும்.

மேலும் படிக்க: பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. விழுப்புரம் முதல் திருவண்ணாமலை வரை சிறப்பு ரயில் அறிவிப்பு..

அதிகாலை நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் லேசான முதல் மிதமான பணிமூட்டம் காணப்படலாம். இதனால் சாலைகளில் பார்வைத்திறன் குறைய வாய்ப்பு உள்ளது.

3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். உள்நாட்டு மாவட்டங்களில் வெப்பம் சற்று அதிகமாக உணரப்படலாம். குறைந்தபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட குறைவாக பதிவாகலாம்.

மேலும் படிக்க: தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் லேசான மேகமூட்டம் நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 34°C வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°C வரைவும் பதிவாகலாம். ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வெப்பம் அதிகமாக உணரப்பட வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தி 37.5°C, மேலூர் 37.2°C, சேலம் 37°C, மதுரை 36°C, ஈரோடு 36°C, திருச்சி 35.7°C ஆகிய இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் மீனம்பாக்கம் 33.9°C மற்றும் நுங்கம்பாக்கம் 32.5°C பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us