Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தைப்பொங்கல் பண்டிகை.. தமிழர் வாழ்வு செழித்திட முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!

2026 Thai Pongal festival: புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் #தமிழர்_திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்! தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், #DravidianModel 2.0-வில் பன்மடங்காகும் என்று அவர் கூறியுள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகை.. தமிழர் வாழ்வு செழித்திட முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!
தலைவர்கள் பொங்கல் வாழ்த்து
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Jan 2026 08:29 AM IST

சென்னை, ஜனவரி 15: தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர். இயற்கை மற்றும் உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: தித்திக்கும் தைப்பொங்கல்.. தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டம்!!

பிரதமர் மோடி வாழ்த்து:

இதுகுறித்து பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், தமிழ் கலாச்​சா​ரத்​தை​யும், இயற்​கை​யுட​னான நமது பிணைப்​பை​யும் பொங்​கல் கொண்​டாடு​கிறது. இந்​தப் பண்​டிகை அனை​வரின் வாழ்க்​கை​யிலும் செழிப்​பை​யும், மகிழ்ச்​சி​யை​யும் கொண்டு வரட்​டும். இயற்​கைக்கு மரி​யாதை செலுத்​து​வதை ஒரு வாழ்க்கை முறை​யாக மாற்ற பொங்​கல் நம்மை ஊக்​குவிக்​கிறது என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:

அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் #தமிழர்_திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்! தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், #DravidianModel 2.0-வில் பன்மடங்காகும்! #வெல்வோம்_ஒன்றாக! என்று பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாகவும், பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நயி​னார் நாகேந்​திரன் வாழ்த்து:

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தனது எக்ஸ் பக்கத்தில், உழவுத் தொழிலை மைய​மாகக்கொண்ட தமிழரின் வாழ்​வியலோடு இணைந்த பண்​பாட்​டுக் கொண்​டாட்​ட​மான பொங்​கல் திரு​நாளில், உலகத் தமிழர் அனை​வருக்​கும் எனது உளமர்ந்த பொங்​கல் வாழ்த்​துகள் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: உலக புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டி… 15,047 காளைகள்-5,234 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு

செல்வப்பெருந்தகை வாழ்த்து:

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வபெருந்​தகை தனது எக்ஸ் பக்கத்தில், உழைப்பை போற்​றும் உன்னத திரு​விழா​வான இந்த நன்​னாளில் இல்​லந்​தோறும் மகிழ்ச்சி பொங்​கி, நம் அனை​வரின் உள்​ளத்​தி​லும் ஊக்​க​மும், உத்​வேக​மும் சிறந்து விளங்​கட்​டும் என்று பதிவிட்டுள்ளார்.