தலைவர் 173 படம் குறித்து முக்கிய அப்டேட்டை சொன்ன ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ
Thalaivar 173 Movie Update: நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 172-வது படமான ஜெயிலர் 2 படத்தின் பணிகளில் பிசியாக உள்ள நிலையில் அடுத்ததாக தனது 173-வது படத்திற்காக நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் அதனைத் தொடர்ந்து நாயகன்களுக்கு வில்லனாக நடித்து வந்தார். நாயகன்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகாம இருந்தது போல நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக நடிக்கும் போதே ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு ரஜினிகாந்தின் ரசிகர்கள் பட்டாளம் விரிவடைந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் படங்கள் வெளியாகிறது என்றால் உலகம் முழுவதிலும் இருந்து தமிழகத்திற்கு ரசிகர்கள் வந்து பார்க்கும் பழக்கம் உள்ளது. அந்த அளவிற்கு நடிகர் ரஜினிகாந்தின் படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் கூலி. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட்டை தற்போது பார்க்கலாம்.




தலைவர் 173 படம் குறித்து முக்கிய அப்டேட்டை சொன்ன ரஜினிகாந்த்:
அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 173-வது படத்தை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஸ்னல் சார்பாக தயாரிக்கிறார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ள நிலையில் படம் குறித்து ரஜினிகாந்த் பேசியது வைரலாகி வருகின்றது.
அதன்படி இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தெரிவித்த நிலையில் இது ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்… வைரலாகும் போஸ்ட்
இணையத்தில் கவனம் பெறும் ரஜினிகாந்த் பேச்சு:
#Thalaivar173 Update from Superstar #Rajinikanth ..🔥🔥🔥
“Shoot Begins from April..🤩 It’s gonna be a Commercial Entertaining picture..💥 Happy Pongal To Everyone.. Ellarum Nalla Irukanum..”🙏 pic.twitter.com/CmZL7OClCo
— Laxmi Kanth (@iammoviebuff007) January 15, 2026
Also Read… விட்றாதடா தம்பி… தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்தது