Parasakthi: வசூலில் சாதனை படைத்ததா பராசக்தி? 2 நாட்கள் வசூல் இத்தனை கோடியா?
Parasakthi 2nd Day Box Office: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த படம்தான் பராசக்தி. இப்படம் கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியான நிலையில், இரண்டு நாட்களில் உலகமெங்கும் மொத்தம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
பெண் இயக்குநராக தமிழில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை கொடுத்துவருபவர் சுதா கொங்கரா (Sudha Kongara). இவரின் இயக்கத்தில் சூர்யாவின் (Suriya) சூரரைப் போற்று (Soorarai Pottru) படத்திற்கு பின் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியாகியுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) லீட் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் அதர்வா (Athrvaa), ரவி மோகன் (Ravi Mohan), ஸ்ரீலீலா (Sreeleela), ராணா, சேத்தன், பேசில் ஜோசப் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் இப்படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் உலகமெங்கும் வெளியாகியிருந்த நிலையில், 2 நாட்களில் மொத்தமாக உலகமெங்கும் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிரடி கதைக்களத்தில் வெளியான இப்படம் 2 நாட்கள்களில் உலகமெங்கும் சுமார் ரூபாய் 51 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: தமிழ் ஆடியன்ஸ்க்கு ஜன நாயகன் ஒரு புது படம் – பகவந்த் கேசரி பட இயக்குநர் அனில் ரவிபுடி பேச்சு!
பராசக்தி படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :
Pathbreaking through the numbers, worldwide – 51 crores for #Parasakthi at the box office🔥💪🏻#ParasakthiPongal@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @saregamasouth @dop007… pic.twitter.com/7lJzfAiRPu
— DawnPictures (@DawnPicturesOff) January 12, 2026
பராசக்தி படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வருகிறது:
இந்த பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் “செழியன்” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா “ரத்னமாலா” என்ற கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இதில் ஸ்ரீலீலா ஒரு தெலுங்கு பெண்ணாகவே நடித்திருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே எவ்வாறு காதல் வருகிறது என்பது குறித்து படத்தின் அரை பாகத்தில் உள்ளது. மேலும் மீதி பாகத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா இருவரும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக போராடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபுவின் படம் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
ஆக மொத்தத்தில் இப்படம் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் தயாராகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதில் அதிகம் அரசியல் கதைக்களங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அண்ணா, எம்ஜிஆர் உட்பட பல அரிசியல்வாதிகளும் உட்படுத்தப்பட்டுள்ளானர். இந்த படம் தமிழ் மொழியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது.