சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபுவின் படம் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
Sivakarthikeyan and Venkat Prabhu Movie Update: தமிழ் சினிமாவில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் பராசக்தி. இந்தப் படத்தில் நடிகர் சிவ்கார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் தொடர்பான அப்டேட் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் பராசக்தி. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். இது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார். 60களில் நடைப்பெற்ற இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவாகி இருந்த நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்து இருந்த நிலையில் அவரது கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆவதற்கு முன்னதாகவே நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியானது. ஆனால் வெங்கட் பிரபு உடனான படத்தின் பணிகள் தாமதம் ஆன நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினர். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது அடுத்தப் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.




சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபுவின் படம் எப்போது தொடங்குகிறது?
அந்த வகையில் சிவகார்த்திகேயன் தனது 26-வது படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படம் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தைப் போல இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டும் இன்றி அதனைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… நான் நடிகராக கட்டாயப்படுத்தப்பட்டேன்… நடிகர் ரவி மோகன்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SivaKarthikeyan Next VP Direction
— The shooting of this film is set to begin in FEB.
— This movie is going to be like Maanaadu, but it’s going to be 10 times more terrifying.#Parasakthi | #SK26 pic.twitter.com/ifNPHrFoGC— Movie Tamil (@_MovieTamil) January 12, 2026
Also Read… வசூலில் சக்கைப்போடு போடும் நிவின் பாலியின் சர்வம் மாயா படம் – வைரலாகும் பதிவு