தூசி தட்டப்படும் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படம்… பொங்கலுக்கு வெளியாகுமா?
தமிழ் சினிமாவில் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திட்டமிட்ட பல நிகழ்வுகள் நடைபெறாத காரணத்தால் கிடப்பில் இருக்கும் பழைப் படங்களை தூசி தட்ட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பல ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் கிடப்பில் இருக்கும் சர்வர் சுந்தரம் படத்தை வெளியிட பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மத கஜ ராஜா படம் அனைத்துப் புதுப் படங்களையும் பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனைப் படைத்தது. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கி இருந்த நிலையில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் பல ஆண்டுகளாக வெளியாகமல் இருந்த நிலையில் 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்கு முக்கிய காரணம் நடிகர் சந்தானத்தின் காமெடி என்றே சொல்லாம். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆன சந்தானம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரது காமெடி படத்தில் இருக்கிறது என்றால் படம் நிச்சயமாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் என்பது கோலிவுட் வட்டாரங்கள் அறிந்த உண்மையே. இப்படி தொடர்ந்து படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் சந்தானம் தற்போது படக்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நாயகனாக நடிக்கும் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




தூசி தட்டப்படும் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படம்:
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிஅக்ர் சந்தானம் நடிப்பில் உருவாகி வெளியாகாமல் காத்திருக்கும் படம் சர்வர் சுந்தரம். இந்தப் படத்தினை இயக்குநர் ஆனந்த் பல்கி எழுதி இயக்கி உள்ளார். படம் பல பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டு தூசி தட்டுவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெலியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புக்கிங்கை தொடங்கியது படக்குழு – வைரலாகும் அப்டேட்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Talks going on to prepare long delayed #ServerSundaram for January 14th Release. Two Other Delayed Projects also trying. pic.twitter.com/wyljWCJtBj
— Insplag (@CcInfilmin) January 9, 2026
Also Read… ஜன நாயகன் படத்திற்கு யு/ஏ வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவிற்கு தலைமை நீதிபதி அமர்வு தடை