தள்ளிப்போன ஜன நாயகன்… ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படங்கள்!
Actor Thalapathy Movies: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன நாயகன் படம் வெளியாக இருந்து தள்ளிப்போன நிலையில் முன்னதாக அவரது நடிப்பில் ஹிட் அடித்த இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் உட்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வழங்காத காரணத்தால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ள நிலையில் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் விதமாக தற்போது செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் மற்றும் லியோ என இரண்டு படங்களும் நாளை 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
நடிகர் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த இந்த இரண்டு படங்களையும் பிரபல தயாரிப்பு நிறுவனமா செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ, எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




நாளை ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் சூப்பர் ஹிட் மாஸ்டர் மற்றும் லியோ படங்கள்:
அதன்படி நடிகர் விஜயின் மாஸ்டர் மற்றும் லியோ என இரண்டு படங்களையுமே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் எழுதி இயக்கி இருந்தார். இதில் லியோ படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, இரண்டு தளபதி பிளாக்பஸ்டர் படங்களுடன் பிரம்மாண்டமான தொடக்க விழா
மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்கள் நாளை முதல் எங்கள் திரையரங்குகளில் கர்ஜிக்கின்றன என தெரிவித்துள்ளது.
Also Read… தளபதி விஜய் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா சொன்ன விசயம்… வைரலாகும் தகவல்
படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Grand opening with two #Thalapathy blockbusters 💥#Master & #Leo roar into our theatres from tomorrow!
Book now on District App 🎟️ pic.twitter.com/bWX9ubKQzf
— Seven Screen’s Cinemas (@7screenscinemas) January 8, 2026
Also Read… ஸ்டாண்ட் வித் விஜய் அண்ணா… இணையத்தில் வைரலாகும் ரவி மோகனின் பதிவு