விஜய் வெர்ஷனில் என்னை தாலாட்டும் சங்கீதம் பாடல்… இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட வீடியோ
Director Vikraman : இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் உன்னை நினைத்து. நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் முன்னதாக நடிகர் தளபதி விஜய் தான் நாயகனாக நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் இனி படங்களில் நடிப்பதில்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும் சமீபத்தில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைப்பெற்ற போது தனது நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்று நடிகர் விஜய் கூறியது அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களை அதிக அளவில் இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் விக்ரமன். எல்லாம் சந்தோசமாக நடக்க இது ஒன்னும் விக்ரமன் படம் இல்லை என்று கூறும் அளவிற்கு அதிகப்படியான ஃபீல் குட் படங்களையே இயக்குநர் விக்ரமன் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அளவிற்கு விக்ரமன் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியது தன்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் ஹிட் அடித்த உன்னை நினைத்து படத்தில் முன்னதாக நடிகர் விஜய் நாயகனாக நடிக்க இருந்ததாகவும் அதில் ஒரு பாடல் மட்டும் படம்பிடிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த வீடியோவைப் பகிர்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.




விஜய் வெர்ஷனில் என்னை தாலாட்டும் சங்கீதம் பாடல் வீடியோ:
உன்னை நினைத்து படத்தில் இடம் பெற்ற “என்னை தாலாட்டும் “பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது..இந்த பாடலை தளபதி விஜய் அவர்களை வைத்து தான் முதலில் படமாக்கி இருந்தேன்..அந்த நினைவுகள் தோன்ற,அந்த பாடல் சம்மந்தமான பழைய வீடியோ ஓன்று கிடைத்தது..மிகவும் டேமேஜ் ஆகியிருந்த அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு post செய்கிறேன். தயவுசெய்து இந்த வீடியோவை திரு. சூர்யாவின் ஏற்கனவே உள்ள வீடியோவுடன் ஒப்பிட வேண்டாம். இருவருமே சிறந்த கலைஞர்கள் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Also Read… பிக்பாஸில் செலிபிரேஷன் வாரத்தில் வீட்டிற்குள் வந்த திவாகர் செய்த செயல் – வார்னிங் கொடுத்த பிக்பாஸ்
இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
Also Read… 3 நாளில் ஜனநாயகன் ரிலீஸ்.. கோர்ட் படியேறிய விஜய் தரப்பு.. தொடரும் சென்சார் பிரச்னை!