Jana Nayagan: நெருங்கிய ரிலீஸ் தேதி.. இன்னும் வழங்கப்படாத சென்சார் – நீதிமன்றத்தை நாட ஜன நாயகன் படக்குழு ஆலோசனை?
Jana Nayagan Faces Censor Issue: தளபதி விஜய்யின் நடிப்பில் பான் இந்திய மொழி படமாக உருவாகியுள்ளதுதான் ஜன நாயகன். இந்த படமானது வரும் 2026 ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு சில நாட்களே உள்ள நிலையில், இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது குறித்து நீதிமன்றத்தை நாடுவதற்கு படக்குழு ஆலோசனை செய்துவருகிறது.
கோலிவுட் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்துவரும் மிக பிரம்மாண்ட படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) உச்ச நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 2வது உருவகம் படமாக இது அமைந்துள்ளது. இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என்.ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படமானது வரும் 2026 ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், கடந்த 2026 ஜனவரி 3ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிப்பட்டிருந்தது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக இப்படத்தின் தமிழக ப்ரீ- புக்கிங்கும் தடைபட்டுள்ளது. இந்நிலையில் சென்சார் (censors) இன்னும் வழங்கப்படாத காரணம் என்ன என தெரியவராத நிலையில், படக்குழு நீதிமன்றத்தை (Court) நாட முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்த தகவல் தற்போது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கு என்ன பிரச்னை? உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவனை வெளியிட்ட அறிக்கை
ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை :
இந்த ஜன நாயகன் படமானது சென்சாருக்காக கடந்த 2025 டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்திலே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் இதை சென்சார் குழுவும் பரிசோதித்த நிலையில், படத்தின் சில காட்சிகளை மற்றும் வசனங்களை மாற்றியமைக்கும்படி கூறியுள்ளது. இதையெல்லாம் திருத்தி சென்சார் குழுவிடம் மீண்டும், கடந்த 2025 டிசம்பர் 19ம் தேதியில் தணிக்கைக்கு மீண்டும் படக்குழு அனுப்பியிருந்த நிலையில், இன்னும் இதற்கு சென்சாரை தணிக்கை குழு வழங்கவில்லையாம்.
இதையும் படிங்க: பிக்பாஸில் விக்ரம் நல்லா கொளுத்தி போடுவார்… வியானா கருத்தால் கண்கலங்கிய விக்ரம்
இது குறித்து படக்குழுவிற்கும் எந்த தகவலையும் சென்சார் குழு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜன நாயகன் படக்குழு நீதிமன்றத்தை நாடுவதற்கு முடிவு செய்துள்ளதாம். படத்தின் வெளியீட்டிருக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், என்ன சென்சார் வழங்கப்படாத நிலையில், படத்தின் ப்ரீ-புக்கிங்கும் தடைபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் பார்வைகள் குறித்த பதிவு :
HIGHEST VIEWED TRAILER IN KOLLYWOOD HISTORY 🔥
83.7M+ cumulative real time views & 1.5M+ cumulative likes in 24 hours 💣
Youtube real time cumulative views – 52.7 M
Instagram views – 31 MAdhan Thalapathy 🧨
Tamil ▶️ https://t.co/L01w8OaHLq
Telugu ▶️ https://t.co/RfdIWprmUu… pic.twitter.com/5wQvbiUiwl
— KVN Productions (@KvnProductions) January 4, 2026
இந்த ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லரானது கிட்டத்தட்ட பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த படமானது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படும் நிலையில், இந்த படத்தில் அரசியலும் கிட்டத்தட்ட 50 சதவீதம் இருப்பதாக கூறபடுகிறது. இப்படமானது வரும் 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகும் நிலையில், முதல் நாளிலே ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.