Jana Nayagan: தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட ட்ரெய்லரில் ஏ.ஐ லோகோ.. ரசிகர்களிடையே கடும் விமர்சனம்!
Jana Nayagan Trailer AI Controversy: நடிகர் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன். இந்த பட ட்ரெய்லர் நேற்று 2026 ஜனவரி 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. அந்த வகையில் இந்த ட்ரெய்லரில் ஒரு கடைசியில் ஜெமினி ஏஐ-யின் லோகோ இடம்பெற்றிருந்த நிலையில், ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஹெச்.வினோத்தின் (H. Vinoth) இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது வரும் 2026 ஜனவரி 9ம் தேதி முதல் பான் இந்திய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இப்படத்தில் இரண்டவது முறையாக இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தளபதி விஜய், “தளபதி வெற்றிக் கொண்டான்” (Thalapathy Vetri Kondaan) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அவரின் மகளாக மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த ஜன நாயகன் படமானது பெண்கள் பாதுகாப்பு, அரசியல் போன்ற கமர்ஷியல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நேற்று 2026 ஜனவரி 3ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. இந்த ட்ரெய்லரில் ஒரு காட்சியில் ஜெமினி ஏ.ஐ-யின் (Gemini AI Logo) லோகோ இடம்பெற்றுள்ளது. இந்த தொடர்பான புகைப்படம் இணையத்தில் தற்போது விமர்சனங்களை ஏற்படுத்திவருகிறது.




இதையும் படிங்க: மங்காத்தாடா… அஜித் குமாரின் மங்காத்தா படத்தின் ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
ஜன நாயகன் பட ட்ரெய்லரில் இடம்பெற்ற ஏ.ஐ. காட்சி குறித்து வைரலாகும் பதிவு :
Have you noticed this?😂 #JanaNayagan #JanaNayaganTrailer #JanaNayaganAudioLaunch #vijay #ThalapathyVijay #Geminiai #JanaNayaganFromJan9 pic.twitter.com/6IKWGLOwxC
— Sakthisaty (@Sakthisaty24) January 4, 2026
இந்த புகைப்படத்தில் தளபதி விஜய் தனது கையில் ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதுபோன்ற கடைசியில், கீழே ஜெமினி ஏ.ஐ பயன்படுத்தும்போது வரும் லோகோ ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ட்ரெய்லரை எடிட் செய்தவர் இந்த லோகோவை கூடவா மறைக்காமல் எடிட் செய்துள்ளார் என விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். இது போன்று காந்தாரா சாப்டர் 1 படத்தின் காட்சி ஒன்றில் வாட்டர் கேன் இடம்பெற்று விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த்து.
இதையும் படிங்க: ஜன நாயகன் படம் முழுமையாகவே பகவந்த் கேசரி பட ரீமேக்கா? ட்ரெய்லரில் ஒத்துப்போன காட்சிகள்..
தற்போது ஜன நாயகன் பட ட்ரெய்லரில் ஏ.ஐ. லோகோ குறித்து ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் படத்தின் ட்ரெய்லரில் இது தற்போது இல்லை. இதை படக்குழு நீக்கிவிட்டதா? அல்லது இது குறித்து போலியான தகவல் இணையத்தில் பரவுகிறதா? என தெரியவில்லை.
கோலிவுட் சினிமாவில் சாதனை படைத்த ஜன நாயகன் பட ட்ரெய்லர் வியூஸ் :
75M+ real time cumulative views in less than 19 hours🔥
Youtube real time cumulative views – 46.6 M
Instagram views – 28.4 MTamil ▶️ https://t.co/L01w8OaHLq
Telugu ▶️ https://t.co/RfdIWprmUu
Hindi ▶️ https://t.co/nkrUMfIzBx#JanaNayaganTrailer #JanNetaTrailer… pic.twitter.com/wDUDjgInXA
— KVN Productions (@KvnProductions) January 4, 2026
இந்த ஜன நாயகன் திரைப்பட ட்ரெய்லர் வெளியாகி 5 நிமிடத்தில் 5 மில்லியன் பார்வைகளை கடந்திருந்தது. அந்த வகையில் 1 மணி நேரத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருந்தார். இந்த் படத்தின் ட்ரெய்லர் தஜமில், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியிருந்த நிலையில், இதுவரை யூடியூபில் மட்டும் 46.6 மில்லியன் பார்வைகளையும், இன்ஸ்டாகிராமில் 28.4 மில்லியன் பறவைகள் என மொத்தமாக 75 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.