Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: ஜன நாயகன் படம் முழுமையாகவே பகவந்த் கேசரி பட ரீமேக்கா? ட்ரெய்லரில் ஒத்துப்போன காட்சிகள்..

Jana Nayagan Trailer Analysis: தளபதி விஜய்யின் கடைசி படமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன். இந்த திரைப்படமானது 2026 ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இது தெலுங்கு படமான பகவந்த் கேசரி பட ரீமேக் என கூறப்பட்டது. இதை எந்தெந்த காட்சிகள் பகவந்த் கேசரி படத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

Jana Nayagan: ஜன நாயகன் படம் முழுமையாகவே பகவந்த் கேசரி பட ரீமேக்கா? ட்ரெய்லரில் ஒத்துப்போன காட்சிகள்..
ஜன நாயகன் டிரெய்லர் அலசல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Jan 2026 13:04 PM IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக கலக்கிவருபவர் தான் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகி வெற்றியை கொடுத்துள்ளது. அந்த வகையில் இவரின் கடைசி திரைப்படமாக ஜன நாயகன் (Jana Nayagan) படமானது வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்தான் (Anirudh Ravichandar) இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் நடிகர்கள் பாபி தியோல் (Bobby Deol), மமிதா பைஜூ (Mamitha Baiju), பூஜா ஹெக்டே (Pooja Hegde), நரேன், பிரியாமணி உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், ட்ரெய்லர் நேற்று 2026 ஜனவரி 3ம் தேதியில் வெளியாகியிருந்தது.

இந்த படமானது ஆரம்பத்திலிருந்தே பகவந்த் கேசரி (Bhagavanth Kesari) படத்தின் ரீமேக் என கூறப்பட்டுவந்த நிலையில், ட்ரெய்லரில் அது உறுதியாகியுள்ளது. ஆனாலும் இப்படத்தின் முழுவதும் பகவந்த் கேசரியின் ரீமேக்காக இல்லை என்றும் தெரியவந்துள்ளது. அப்படி எந்த காட்சிகள் உள்ளது என பார்க்கலாம்.

இதையும் படிங்க: மலேசிய கார் ரேஸ் ஓவர்.. நண்பர்களுடன் கெட்-டூ-கெதர் பார்ட்டியில் அஜித் குமார்!

ஜன நாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துபோகிறதா ஜன நாயகன் திரைப்படம் :

இந்த ஜன நாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லரில் பல வித்தியாசமான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே மற்றும் நமிதா பைஜூவின் குழந்தை பருவ காட்சிகள் உட்பட பல காட்சிகள் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப்போகிறது. மேலும் தெலுங்கில் பாலையா நடித்திருந்த பகவந்த் கேசரி படம் முழுவதும் அவரின் வளர்ப்பு மகளை காப்பாற்றுவது தொடர்பான கதையில் அமைந்திருந்தது. இதில் சிறிய பகுதியாக அரசியல் இருந்தது என்றே கூறலாம். அது போல ஜன நாயகன் பட ட்ரெய்லரில், விஜய் பேசும் வசனங்கள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப்போகிறது.

இதையும் படிங்க: இது அண்ணன் தம்பி பொங்கல்… ஜனநாயகன் vs பராசக்தி – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

அந்த வகையில் இப்படம் முழுமையாக அந்த படத்தின் ரீமேக்காக தெரியவில்லை. ஜன நாயாகின் படத்தில் அரசியல் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளது. மேலும் ட்ரெய்லரின் இறுதிக்காட்சியில் ரோபோட்டுடன் விஜய் சண்டையிடுவது போன்றும் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் 80 சதவீதம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும், 20 சதவீதம் ஹெச். வினோத் கதையை மாற்றி எழுதியுள்ளார் என்றும் தெரியவருகிறது. இந்த் படத்தின் ரிலீசிற்கு பிறகுதான் தெரியவரும் இது முழுமையாக பகவந்த் கேசரி படமா? அல்லது 100 சதவீதம் தளபதி படமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.