மலேசிய கார் ரேஸ் ஓவர்.. நண்பர்களுடன் கெட்-டூ-கெதர் பார்ட்டியில் அஜித் குமார்!
Ajith Kumar Get-together Party: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் இந்தியாவின் சார்பாக கார் ரேஸ் போட்டிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மலேசிய கார் ரேஸ் பந்தையத்திலும் அவர் கலந்துகொண்டிருந்தார். அதை முடித்த கையேடு சென்னையில் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் இயக்குநர்களுடன் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 1 படம் என்ற விதத்தில் திரைப்படங்கள் வெளியாக்குவது வழக்கமே அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் இவரின் நடிப்பில் 2 படங்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா ஒரு புறம் இருந்தாலும், இன்னொருபுறம் தனது பேஷனான கார் ரேஸ் (Car Race) போட்டியையும் தொடர்ந்துவருகிறார். கடந்த 2024ம் ஆண்டு இறுதிமுதல் கார் ரேஸில் முழுமையாக இறங்கிய அஜித் குமார், இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடந்த 24H கார் ரேஸில் கலந்துகொண்டுவந்தார். இதுவரை கிட்டத்தட்ட 4 போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியையும் பெற்றுள்ளார். அந்த வகையில் இவர் இறுதியாக கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மலேசியாவில் (Malaysia) நடைபெற்ற கார் ரேஸ்பொட்டிலும் தனது அணியினருடன் கலந்துகொண்டார்.
இதில் அவரின் அணி 4வது இடத்தை பிடித்திருந்தது. இந்த கார் ரேஸின்போது அஜித் குமாருக்கு உதவியாக இயக்குநர்கள் சிறுத்தை சிவா (Siruthai Siva), ஏ.ல். விஜய் (AL.Vijay), ஆதிக் ரவிச்சந்திரன் (Aadhik Ravichanthiran) என பல்வேறு இயக்குநர்களும் இருந்தனர். அவர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் விதத்தில் சமீபத்தில் அஜித் குமார் கெட் டூகெதர் ஒன்றை நடத்தியுள்ளார்.




இதையும் படிங்க: “இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளது”.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
அஜித் குமார் நடத்திய கெட் டூகெதர் குறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்ட பதிவு :
#AK family get-together vibes, clicked today in Chennai 🤍✨
Moments that matter, memories that last.@Akracingoffl @directorsiva @Adhikravi #AKFamily #FamilyTime #AjithKumar #ShaliniAjithKumar #SureshChandra #Siva #Vishnuvardhan #AdhikRavichandran #ALVijay #Togetherness… pic.twitter.com/axnnwcI0jM— Suresh Chandra (@SureshChandraa) January 3, 2026
மலேசிய கார் ரேஸின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் சென்னை வந்தடைந்தார் அஜித் குமார். இந்நிலையில் இவர் நேற்று 2026 ஜனவரி 3ம் தேதியில் தனது நெருங்கிய நண்பர்களும், இயக்குநர்கள் மகிழ் திருமேனி, ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா, ஏ.எல். விஜய் உட்பட பல்வேறு நபர்களை அழைத்து கெட் டூகெதர் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இந்த பார்ட்டியில் அஜித் குமார் மற்றும அவரின் மனைவி நடிகை ஷாலினி உட்பட பல்வேறு குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படமானது தற்போது எக்ஸ் பக்கத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: பராசக்தி படத்திற்கு UK-வில் வரவேற்பு.. ப்ரீ-புக்கிங்கில் தெறிக்கவிடும் பராசக்தி!
அஜித் குமார் இன்னும் ஒரு கார் ரேஸ் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார். விரைவில் துபாயில் நடைபெறவுள்ள ஆசிய லீ மான்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக தனது புதிய அணியினருடன் கலந்துகொள்ளவுள்ளார். இந்த போட்டியானது இந்த 2026 ஜனவரி இறுதியில் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த போட்டியை முடித்ததும் AK64 என்ற படத்தில் இணையவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 பிப்ரவரி இறுதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.