Thalaivar173: ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தின் இயக்குநர் இவரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
Thalaivar 173 Movie Director Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படமானது தயாராகிவருகிறது. இந்த படத்தை அடுத்ததாக கமல்ஹாசனின் தயாரிப்பின் கீழ் தலைவர் 173 படத்தில் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். இந்த படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
கோலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்துவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தமாக சுமார் 171 படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் இறுதியாக வெளியான படம் கூலி (Coolie). இதை லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்க, பான் இந்திய மொழி படமாக கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இந்த படத்தினை அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் இணைந்திருந்தார். இந்த படமானது 2024ல் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மார்ச் மாதத்திலே தொடங்கிய நிலையில், இதன் ஷூட்டிங்கை ரஜினிகாந்த் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது 173வது படத்தை கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த தலைவர் 173 படத்தை சுந்தர் சி (Sundar C) முதலில் இயக்குவதாக இருந்த நிலையில், பின் அவர் விலகிவிட்டார். அந்த வகையில் இந்த படத்தின் புது இயக்குநர் யார் என்பது படக்குழு அறிவித்துள்ளது . ரஜினிகாந்தின் தலைவர் 173 திரைப்படத்தை டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி (Cibi Chakravathi ) இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ‘ராவண மவன்டா’.. ரசிகர்கள் கொண்டாடும் ஜன நாயகன் பட 4வது பாடல் வெளியானது!
தலைவர் 173 படம் குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட பதிவு :
Every HERO has a FAMILY#Arambikalama #Thalaivar173 #SuperStarPongal2027 @rajinikanth @ikamalhaasan @Dir_Cibi @anirudhofficial #Mahendran @APIfilms @homescreenent@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/IkVVMgi3q8
— Raaj Kamal Films International (@RKFI) January 3, 2026
இந்த தலைவர் 173 படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ள நிலையில், முற்றிலும் ஆக்ஷ்ன் நிறைந்த திரில்லர் கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, சுமார் ரூ 200 முதல் ரூ 300 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகவுள்ளதாம். இந்த படமானது வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையி முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போது :
தலைவர் ரஜினிகாந்தின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் படம்தான் ஜெயிலர் 2. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளும் துவங்கியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், பாடல்கள் அனைத்தும் தரமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நெக்ஸ்ட் டார்கெட் குழந்தைகள்தான்.. குரங்கை மையப்படுத்தி படம் எடுக்கவுள்ளேன்- இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!
ஜெயிலர் 1ல் இருந்த அதே நடிகர்கள் இப்படத்திலும் இருக்கும் நிலையில், மேலும் முக்கிய வேடத்திலும் சில நடிகர்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ல் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.