பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி நதியின் அதிகப்படியான நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. சிந்து நீர்வழி ஒப்பந்தத்தை றுத்திய பின்னர், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஷாபூர் கண்டி அணையின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் அமைச்சர் ஜாவேத் அஹமத் ராணா தெரிவித்ததாவது, அணையின் பணிகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அணை செயல்பாட்டுக்கு வந்தவுடன், ரவி நதியின் அதிகப்படியான நீர் பாகிஸ்தானுக்கு செல்லாமல் தடுக்கப்படும்.