Sivakarthikeyan: சுதா கொங்கரா ஷூட்டிங்கில் எப்போதுமே அப்படித்தான் பேசுவாங்க.. ஒண்ணுமே புரியாது – கலகலப்பாக பேசிய சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan About Sudha Kongara: சிவகார்த்திகேயனின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் பராசக்தி. இப்படமானது வரும் 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் சுதா கொங்கரா குறித்து சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் பெண் இயக்குநராக இருந்து சிறந்த படத்தை இயக்கிவருபவர்தான் சுதா கொங்கரா (Sudha Kongara). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று (Iruthi Suttru), சூரரைப்போற்று போன்ற பிரம்மாண்ட படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களில் வரிசையில் தற்போது பராசக்தி (Parasakthi) என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது 1964 நடக்கும் ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு தயாராகியுள்ளது.
இந்த படமானது தமிழ் மொழி மற்றும் அரசியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2026 ஜனவரி 3ம் தேதியில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது சுதா கொங்கரா குறித்து சிவகார்த்திகேயன் கலகலப்பாக பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்தப் படம் இப்படிதான் இருக்குமாம் – என்ன சொல்லி இருக்கார் பாருங்க
சுதா கொங்கரா குறித்து சிவகார்த்திகேயன் கலகலப்பு பேச்சு :
அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், அதில் “பராசக்தி படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் தெரிந்தது, சுதா கொங்கரா மேம் ஆங்கிலத்தில்தான் விளக்கமே கொடுக்கிறார் என்று. இங்கிலீஸ் என்றால் அவர் சாதாரணமான ஆங்கிலத்தில் பேசமாட்டார். அது ஷேக்ஸ்பியர் இங்கிலீஸ் போல இருக்கும். அவர் முதலில் இங்கிலீஸ் ஒரு காட்சியை இப்படித்தான் நடிக்கவேண்டும் என சொன்னதும். நான் எனக்கு புரிந்ததை வைத்து நடிப்பேன். உடனே சுதா மேம், சிவா நீங்க இப்படி பண்ணகூடானது, இந்த மாதிரி பண்ணனும் என ஒரு புரியாத ஆங்கில வார்த்தையை சொல்லிட்டு போயிடுவாங்க. நான் உடனே அந்த ஆங்கில வார்த்தை என்னவாக இருக்கும் என் சாட் ஜிபிடி-யிடம் கேட்டுப்பார்ப்பேன். இப்படியே ஒரு 2 நாள் போனது, நான் இதுபோன்றே செய்துகொண்டு இருந்த நிலையில், சுதா மேம் என்னிடம் கோபத்துடன் தனியாக பேசவேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு நான் நாலு கதை சொல்லியிருக்கேன்.. – மிஷ்கின் சொன்ன விஷயம்!
சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ பதிவு :
“During #Parasakhi, SudhaKongara mam explains everything shakespeare english. I used to check in Chatgpt for that😁. One day Sudha mam asked what’s the problem, it reminds my teacher in school😀”#Sivakarthikeyan Mimics in SudhaKongara & GVM Voice🤣🔥 pic.twitter.com/QhVlOFs9Az
— AmuthaBharathi (@CinemaWithAB) January 5, 2026
உடனே சிவா உங்களுக்கு என்ன பிரச்சனை, ஏன் சரியாக நடிக்கமாட்டிக்கிறீங்கனு கேட்டாங்க. உடனே நான், மேம் உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் பேசும் புரியாத இங்கிலீஸ் தான் எனக்கு பிரச்சனை. நான் ஏற்கனவே கௌதம் மேமனுடன் படம் பண்ணி இருந்தாலே நீங்க பேசுற இங்கிலீஷை கொஞ்சமாவது புரிஜிருக்கும். உடனே சுதா மேம் என்னிடம் அயோ உங்களுக்கு நான் பேசும் இங்கிலீஷை பிரச்சனை. உடனே அவரிடம் நான், ஆமாம் மேம் நீங்க கொஞ்சம் பிரிட்டிஷ் இங்கிலீசு பேசினால் எனக்கு புரியும். ஆனால் நீங்க பழைய இங்கிலீஸ் பேசுறீங்கனு சொன்னேன் என அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலகலப்பாக பேசியிருந்தார்.